பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூகவலைதள பக்கங்களில் பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் நிக் ஜோனஸின் பெயரை துறந்த நிலையில், அவர் கணவரைப் பிரிவதாக வதந்திகள் பெருகின. ஆனால், அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்கள் பங்கேற்கும் தி ஜோனஸ் பிரதர்ஸ் ஃபேமிலி ரோஸ்ட் (The Jonas Brothers Family Roast) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதென்ன ரோஸ்ட் நிகழ்ச்சி?
‘ரோஸ்ட்’ (Roast) எனப்படும் ஒருவகை நகைச்சுவை அமெரிக்காவில் மிகப் பிரபலம். நட்சத்திரங்களை உட்காரவைத்து, வாய்க்கு வந்தபடி ‘வறுக்கும்’ நிகழ்ச்சி இது. ஒரு வகையான நையாண்டி நிகழ்ச்சி இது. இதில் வசைபாடுதலும், காலைவாறும் வகையில் பேசுதலும், ஆபாசப் பேச்சுக்களும், சமிஞைகளும் தாராளமாக இருக்கும். இது தாங்க ரோஸ்ட் நிகழ்ச்சி.
தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. அதில், பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் டீஸர் ஒன்றை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழே, கணவர் ஜோனஸுக்கும் அவரின் சகோதரர்களுக்கும் இரவு உணவுக்காக நல்ல ரோஸ்ட் (வறுவல்) வாங்கி வந்துள்ளேன். இது ஜோனஸ் குடும்பத்தினராக இருப்பதற்காக கிடைக்கும் சலுகை என்று பதிவிட்டிருந்தார்.
அந்த டீஸரில் பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார். அவர், "நான் இன்றிரவு இந்த மேடையில் நிற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் இந்தியாவில் இருந்து வந்துள்ளேன். என் தேசம் வளமான கலாச்சாரம் கொண்டது. அது நிக் ஜோனஸிடம் இல்லை. எனக்கும் நிக் ஜோனஸுக்கும் 10 வருட வயது வித்தியாசம் உள்ளது. ஆம். அதனால் நிக்குக்கு 90களின் பாப் கலாச்சாரம் பற்றித் தெரியாது. நான் சொல்லித் தருவேன். அவர் எனக்கு டிக்டாக் பற்றி சொல்லித் தந்துள்ளார். இருவருமே பரஸ்பரம் சில விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம். அப்புறம் நான் நடிப்புத் தொழிலில் எப்படி வெற்றிகரமாக இருப்பது என்பதை நிக் ஜோனஸுக்கு கற்றுத் தருகிறேன்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
இதனைப் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, ”அற்புதம்” என்று தலைப்பிட்டுள்ளார். சமந்தாவும் தனது கணவரைப் பிரிவதற்கு முன் சமூகவலைதளங்களில் அவரது பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் நாகசைதன்ய அக்கினேனி என்ற பெயரை அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மை ஃபேமிலி டோட்டல் டேமேஜ் என்ற ரேஞ்சுக்கு கணவரையும், அவரது குடும்பத்தையும் பிரியங்கா சோப்ரா வறுத்தெடுத்துள்ளார். பிரியங்கா பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியது ஒருவித பப்ளிசிட்டி ஸ்டன்ட் என அந்த ஸ்டண்டையும் வறுக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.