மயோசிட்டிஸ் நோய், நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து என தன் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.


இறுதியாக தெலுங்கில் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்த நிலையில், அடுத்ததாக சமந்தா நடித்து முடித்துள்ள சிட்டடெல் தொடருக்கான டப்பிங் பணிகளை முன்னதாக சமந்தா மேற்கொண்டார். இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது சினிமாவில் இருந்து தற்காலிகமாக ப்ரேக் எடுத்துள்ள சமந்தா, தொடர்ந்து சுற்றுலா செல்வது, ஆன்மீகத் தலங்களுக்கு பயணிப்பது, சமூக வலைதளங்களில் தன் ரசிகர்களுடன் உரையாடுவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என ஆஃப் ஸ்க்ரீனில் சமந்தா ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.




இந்நிலையில் சமந்தா தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. பிரபல தனியார் இதழின் அட்டைப் படத்துக்காக ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்தில் படு ஸ்டைலாக சமந்தா போஸ் கொடுத்துள்ள நிலையில், இந்தப் புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.