நடிகை சமந்தா(Samantha) தற்போது இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகையாக அடையாளம் காணப்படுகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இந்த தொகுப்பிள் சமந்தா பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.


ஆரம்ப வாழ்க்கை:


சமந்தா நடிக்க வருவதற்கு முன்னதாக ஏகப்பட்ட வேலைகளை செய்திருக்கிறார். அதனை செய்துக்கொண்டே பகுதி நேரமாக மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்,


வேறு பெயர்:


சமந்தாவிற்கு யசோதா என வேறு பெயரும் உண்டு. இந்த பெயரை சொல்லி அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அழைக்கின்றனர்.


நீரிழிவு நோய் :


சமந்தாவிற்கு 2013-இல் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அதிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டாரா என்பது தெரியவில்லை 







NGO


சமந்தா Pratyusha Support என்னும் NGO நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அதோடு உடல்நிலை பாதிக்கப்பட்ட  ஆதரவற்ற பெண்களுக்கான சிகிச்சை செலவுகளையும் செய்து வருகிறார்.


ரோல் மாடல் 


சமந்தாவிற்கு ஹாலிவுட் நடிகை Audrey Hepburn என்றால் மிகவும் பிடிக்குமாம். அவர்தான் இவருக்கு இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார்.


பயண விரும்பி 


சமந்தாவிற்கு டிராவல் என்றால் மிகவும் பிடிக்கும் . ஹாப்பியாக இருந்தாலும் சரி , சோகமாக இருந்தாலும் சரி உடனே ஒரு ட்ரிப்பை பிளான் செய்துவிடுவாராம் . அது அவரது இன்ஸ்டாகிராமை பார்த்தாலே நமக்கு நன்றாக புரியும்.


 






உடற்பயிற்சி :


தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகளில் அதிகம் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் உடையவர் . அவர்  எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்வார் என்பதை அவர் இன்ஸ்டாகிராமே சொல்லும்


சாப்பாடு பிரியை 


சமந்தா ஃபிட்னஸில் அதிகம் கவனம் செலுத்தினாலும் அவர் ஒரு சாப்பாடு பிரியைதானாம் . அவருக்கு சீனர்களின் பாரம்பரிய உணவான சூஷி என்றால் மிகவும் பிடிக்குமாம்.


Also Read | Kaathu Vaakula Rendu Kadhal Review: ‛ஒரு முட்டையில் 2 ஆம்லெட்’ போட்ட காத்து வாக்குல ரெண்டு காதல்... என்ன மாதிரியான படம்?