நடிகை சமந்தா மும்பையில் ஆடம்பரமான 3-BHK அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஃப்ளாட்டின் விலை 15 கோடி ரூபாய் என்றும், கடலை நோக்கி இந்தக் குடியிருப்பு அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் சினிமாவில் கவனம்
வருண் தவானுடன் ’சிட்டடல்’, நடிகர் அக்ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் என சமந்தா அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் விக்கி கௌஷல் உடன் பெரும் பொருட்செலவில் தயாராக உள்ள த இம்மார்டல் அஸ்வத்தாமா எனும் புராணக்கதையிலும் சமந்தா நடிக்க உள்ளார். இந்தப் படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் வேலை நிமித்தமாக சமந்தா தற்போது மும்பையில் வீடு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மயோசிட்டிஸ் பாதிப்பு
நாக சைதன்யாவுடன் திருமண முறிவு, மயோசிட்டிஸ் பாதிப்பு என கடந்த ஆண்டு முழுவதும் சமந்தா கவலையில் ஆழ்ந்திருந்தார். ஆனால் மற்றொருபுறம் இவை எதையும் தன் கரியரை பாதிக்கவிடாமல் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து தன் சினிமா பயணத்தில் இன்னும் சிறப்பாகப் பயணித்து வருகிறார்.
சமந்தா நடித்து முடித்து வெளியீட்டுக்குத் தயாராகவிருக்கும் ’சாகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு முன்னதாக தள்ளிப்போனது.
சாகுந்தலம் ஒத்திவைப்பு
புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் சமந்தா சகுந்தலாவாக நடித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.
பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட இந்தப் படம் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. மற்றொருபுறம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ’மகாநதி’ படத்துக்குப் பிறகு குஷி படத்தில் இணைந்துள்ளார் சமந்தா.
விஜய் தேவரகொண்டாவுடன் குஷி
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில், சமந்தாவின் மயோசிட்டிஸ் பாதிப்பால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பான் இந்தியா படமாகத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மயோசிட்டிஸ் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்தும் வகையில் தற்போது மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: Leo Trisha: ’லியோ’ விஜய்யின் ஜோடி நான்தான்.. வீடியோ, ஃபோட்டோஸ் பகிர்ந்து உறுதி செய்த த்ரிஷா!