சமீப காலமாகவே டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கோலிவுட், டோலிவுட் பிஸியாக நடித்து வரும் நடிகை அண்மையில்தான் தனது காதல் கணவரை பிரிந்தார், அதன் பிறகு புத்துணர்வு பெற்றவர் போல தன்னை மிகுந்த பாசிட்டிவ் மனுஷியாக சமூக வலைத்தளங்களில் காட்டிக்கொள்கிறார். தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சமந்தா , அண்மையில் தனது தோழிகளிடன் கோவா சென்றிருந்தார். அப்போது நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , பகிர அது வைரலானது. இந்த நிலையில் சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 10 கிலோ எடையை , பளுதூக்கும் வீராங்கனைப் போல் அசால்ட் காட்டுகிறார் சமந்தா.
Arrangements of Love’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் சொந்த துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் இருபாலின ஈர்ப்புடைய தமிழ் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமந்தா தற்போது ஃபேமிலி மேன் வெப் தொடர் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் இணந்து சிடாடெல்என்னும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியா மற்றும் இத்தாலி என இரண்டு தேசங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள கதை என கூறப்படுகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளார். இந்நிலையில் உலக புகழ்பெற்ற அவஞ்சர்ஸ் என்னும் படத்தின் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் வருகிற 2022 ஆம் ஆண்டு இதனை வெளியிட உள்ளதாகவும் , சிடாடெல் வெப் தொடரை பிரபல மார்வெல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.