'பெண்கள் வீழ்வதற்காகதான் எழுகிறார்கள்' என்று ஒரு நபர் ட்வீட் செய்ததற்கு நெற்றி அடி பதிலை கொடுத்துள்ளார் சமந்தா.


கடந்த 2010 ஆம் ஆண்டில் தனது சினிமா பயணத்தை துவங்கிய சமந்தா, தெலுங்கு மற்றும் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா ஒருவரே லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் சொல்லிக்கொண்டு இருக்க, அதற்கு இணையாக சமந்தாவும் வந்து விட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்;  ஆரம்ப காலங்களில், இவரின் மூக்கையும் இவரின் தோற்றம் குறித்து கேலிகள் பலவை வந்த போதிலும், அதையெல்லாம் உதறிவிட்டு தன் வேலையை நேர்த்தியாக செய்து வந்தார் சமந்தா. 




தெலுங்கு நடிகரான, நாகார்ஜுனாவின் மூத்த மகனான  நாக சைதன்யாவை நீண்ட காலமாக காதலித்து 2017 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். இந்த ஜோடி, 2021 ஆம் ஆண்டு சில காரணங்களால் பிரிந்தனர். அந்த பிரிவில் மனம் உடைந்த சமந்தா, ஆன்மீக பயணம் செய்து, அவரின் மனதை பக்குவப்படுத்தினார்; உடற்பயிற்சி, யோகா என அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்; கடந்த ஆண்டில் வெளிவந்த புஷ்பா படத்தில்  ‘ஓ சொல்றியா’ என்ற கமர்ஷியல் பாடலில் நடனமாடி, அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார்.


சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டார். இருப்பினும் இவர் விடாமுயற்சியுடன் ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில், யசோதா படத்திற்கு டப்பிங் கொடுத்தார். அந்த படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடிய சமந்தா ,  கனெக்ட் மற்றும் ராங்கி ஆகிய படங்களின் போஸ்டரை பகிர்ந்து. “பெண்கள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்” என்று பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டிற்கு ஒருநபர், “ ஆம், பெண்கள் உயர்வதே வீழ்வதற்குதான் என்றார். இந்த தனி நபரின் ட்வீட்டிற்கு, “மீண்டும் எழுந்து வருவது, எங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது நண்பரே. ” என்று தடாலடி பதிலை கொடுத்துள்ளார்.





இதே போன்று, சிலரது ட்வீட்களுக்கும் சமந்தா பதில் கூறியுள்ளார். 









ட்வீட்  : உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது?


சமந்தாவின் பதில் : வித்தியாசமாக இருக்கிறது.









ட்வீட் : நான் எப்போதும் உங்களின் விசுவாசமான ரசிகனாக, உங்கள் பாதுகாவலராக, உங்கள் நம்பிக்கைக்குரியவராக இருப்பேன் . நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்.உங்கள் மீதான என் அன்பு எப்போதும் இருக்கும்.


சமந்தாவின் பதில் : எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி. உங்கள் பிரார்த்தனைகளால்தான் நான் வலிமையாக உள்ளேன்.






ட்வீட் : உங்களை என் பிரார்த்தனையில் வைக்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் வலிமையாக மாறுவீர்கள். 


சமந்தாவின் பதில் : நிச்சயமாக இது தேவைப்படும் என்று அவர் பதிலளித்தார்.