யாரையாவது டேட் செய்யலாமே என ரசிகர் கேட்ட கேள்விக்கு, சமந்தா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.


சமந்தா கொடுத்த க்யூட் பதில்:


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமந்தா, அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அதுதொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்த ஒரு ரசிகை, ”இந்த கருத்தை சொல்ல இது எனக்கான இடம் இல்லை என்பது எனக்கு தெரியும், இருந்தாலும் யாரேனும் ஒருவரை நீங்கள் டேட் செய்யலாமே”  என சமந்தாவை டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள சமந்தா, ”உங்களை போல யார் என்னை நேசிப்பார்கள்” என அந்த ரசிகைக்கு பதில் அளித்துள்ளார்.


இன்னல்களை கடந்து வரும் சமந்தா:


மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு, தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடனான மணமுறிவு உள்பட பல இன்னல்களை எதிர்கொண்டு, மெல்ல மெல்ல அவற்றை கடந்து வருகிறார் சமந்தா.  இதனிடையே,  கடந்த சில மாதங்களாக சமந்தா ஆன்மீகப் பாதையிலும், தீவிர உடற்பயிற்சி மோடிலும் இறங்கி ஆர்வம் காண்பித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் பதிவுகள் லைக்குகளை அள்ளி வருகின்றன. கடந்த வாரமும், உடற்பயிற்சியின் போது பிளாங்க் எடுப்பதை போன்று அவர் வெளியிட்ட  புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.


சாகுந்தலம் படம் ப்ரொமஷனில் தீவிரம்:


இதனிடையே, சமந்தா முதல்முறையாக நடித்துள்ள வரலாற்று கதையை மையமாக கொண்ட  சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினருடன் இணைந்து  ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.


மீண்டும் நடிப்பில் கவனம்:


சாகுந்தலம் படத்தை தொடர்ந்து சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளது. ‘மகாநதி’ படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய் தேவராகொண்டா நடிகை சமந்தாவுடன் இணைந்துள்ளார்.  ஜாலியான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளதோடு, லைகர் படத்திற்கு பிறகு வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து, பாலிவுட்டில்  நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் தொடரிலும்,  அக்‌ஷய் குமாருடன் இணைந்து பெயரிடப்படாத படத்திலும் சமந்தா  நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நேரடி தமிழ் திரைப்படங்களில் சமந்தா கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த ஆண்டு ”காத்து வாக்குல ரெண்டு காதல்” எனும் ஒரு படமும், அதற்கு முன்னதாக 2019ம் ஆண்டில் ”சூப்பர் டீலக்ஸ்” திரைப்படமும் தான் தமிழில் சமந்த நடிப்பில் நேரடியாக வெளியான திரைப்படங்கள் ஆகும்.