சமந்தா சமீப காலமாகவே அதிகம் கவனம் பெறும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார்.அவர் என்ன செய்தாலும் ஒன்று பேசு பொருளாகிவிடுகிறது இல்லையென்றால் வைரலாகிவிடுகிறது. சமந்தா தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை விட பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல துறைகளிலும் களம் கண்டு வருகிறார் சமந்தா. இப்படியான சூழலில் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பாரா என்ன ? . தற்போது சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் , முன்னணி நடிகைகள் யாரும் செய்ய யோசிக்கும் துணிவான செயலை செய்திருந்தார் சமந்தா. வேறு ஒரு நடிகையின் படத்தில் கிளாமர் பாடல்களுக்கு ஆட பல டாப் ஹீரோயின்கள் யோசிக்கும் சூழலில் , சமந்தா ஆடிய ஒ அண்டவா குத்துப்பாடல் யூடியூப் வரலாற்றிலேயே சாதனை படத்தை பாடலாக கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் சம்ந்தா தனது படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக பெற்றிருந்தார். அந்த தொகை 1.5 கோடி என கூறப்படுகிறது. ஒரு பாட்டுக்கே இவ்வளவு வாங்கிவிட்டோம் இனி படத்திற்கு 3 கோடி என நிர்ணயித்துவிட்டாராம் சமந்தா.
தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. காரணம் படத்தின் முழு பாரமும் இயக்குநர் மற்றும் நாயகனை சார்ந்தே இருப்பதால்தான்.நடிகை நயன்தாராதான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார். அவர் சம்பளம் 5 முதல் 6 கோடி என கூறப்படும் நிலையில் , இரண்டாவது இடத்தை சமந்தா பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, விக்னேஷ் சிவன் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.