நடிகை சமந்தா அரேஞ்மென்ட்ஸ் ஆஃப் லவ் நாவலை தழுவி உருவாக்கப்படும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மூலம் சமந்தா ஹாலிவுட்டில் எண்ரி ஆகிறார். இந்த நாவல் இந்திய எழுத்தாளர் Timeri N Murari எழுதப்பட்டது. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.பிலிப் ஜான் இயக்கும் இந்தப் படத்தை குரு பிலிம்ஸ் தயாரிக்கிறது
இந்தத் தகவலை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “ ஏ மாயா சேசாவே” படத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு நான் ஆடிசன் செய்யப்பட்டேன். தற்போது 12 வருடத்திற்கு பின்னர் மீண்டு ஆடிசன் செய்யப்பட்டிருக்கிறேன். அதேப் படபடப்பு தற்போதும் இருக்கிறது.
பாஃப்டா விருது வென்ற, விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற, உங்களுக்கு மிகவும் பிடித்த Downton Abbey சீரிஸை இயக்கிய இயக்குநர் ஆடிசன் செய்வது தினமும் நடக்காது என நினைக்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நன்றி” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம் பேஸ்புக் பக்கத்தில் தொடர ட்விட்டர் பக்கத்தில் தொடர யூடிபில் வீடியோக்களை காண