நடிகை சமந்தா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான 'சாகுந்தலம்' திரைப்படம் பெரிய அளவு வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து சமந்தா தற்போது நடித்து வரும் சிட்டாடல் வெப் சீரிஸ்காக மிகவும் கடுமையாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.


ஸ்பை திரில்லர் சிட்டாடல்:


ஆக்‌ஷன் சீக்வென்ஸ் நிறைந்த ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்த தொடரில் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் எடுத்துக்கொள்ளும் பயிற்சி ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

பல விளையாட்டு வீரர்கள் மற்றும் ஃபிட்னஸ் ஃப்ரீக்ஸ்கள் பலரும் ஐஸ் பாத் எடுத்துக் கொள்வதை ஒரு பயனுள்ள பயிற்சியாக கருதுகிறார்கள். அதை நடிகை சமந்தாவும் ட்ரை செய்துள்ளார். அவர் ஐஸ் பாத் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்துள்ளார். இந்த ஐஸ் பாத் பயிற்சியை மேற்கொள்வதால் பல நன்மைகளை பெறுவதோடு குணமடையவும் உதவுகிறது.


 



சமந்தா ஒரு ஐஸ் டப்பில் மூழ்கியிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து "இது டார்ச்சர் டைம்" என்ற கேப்ஷனுடன் போஸ்ட் செய்து இருந்தார். முதலில் ட்ரை செய்பவர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் ஐஸ் பாத் எடுத்துக்கொள்ள கூடாது என்பது முக்கியமான தகவல்.

ஐஸ் பாத் எடுப்பதன் நன்மைகள் :

* ஐஸ் பாத் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு தசைகளை ரெகவரி செய்ய உதவுகிறது. குளிர்ந்த நீர் உங்கள் இரத்த நாளங்களை சுருக்கி, சிறியதாக ஆக்குகிறது, அதிலிருந்து வெளியேறியவுடன், வெப்பநிலையின்  மாற்றத்தால் மீண்டும் திறக்க உதவுகிறது. இது தசைகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

* தசை வலியைத் தடுக்கலாம்

* ஐஸ் பாத் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று அது நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது

* உங்கள் உடலை அமைதிப்படுத்த உதவுகிறது. மன ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் மேம்படுத்துகிறது. குளிர்ந்த நீர் குளியலும் ஐஸ் பாத்துக்கு இணையானது. ஹைபர்தர்மியாவிலிருந்து விடுபட உதவும். ஐஸ் பாத் எடுத்துக் கொண்ட பிறகு இதமாக இருந்தாலும் ஒரு சில சமயங்களில் அது உடல் வலியை ஏற்படுத்தும்.

தற்போது மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு வரும் சமந்தா, சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு அதன் வீடியோவும் புகைப்படங்களையும் அவ்வபோது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து 'குஷி' திரைப்படத்திலும் வருண் தவானுடன் இணைந்து 'சிட்டாடல்' தொடரின் இந்திய பதிப்பிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.