நடிகை சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு, தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, நாக சைதன்யா திரைத்துறை சாராத ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்தான தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை.
நடிகர் நாகசைதன்யாவுடனான மன உறவை முறித்துக்கொண்ட சமந்தா தொடர்ச்சியாக படங்களில் பிஸியாகி உள்ளார். யசோதா, சகுந்தலம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் கவனத்தை திருப்பியுள்ளார் சமந்தா. வருண் தவன் படத்திலும் நடிக்கவுள்ளார். அதேபோல் இந்தி வெப் சீரிஸிலும் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் நாதசைதன்யாவையும், நடிகை சமந்தாவையும் இணைந்து நடிக்க வைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
தெலுங்கு இயக்குநரான நந்தினி ரெட்டி இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சமந்தாவின், ஜபர்தஸ்த், ஓ பேபி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் தனது அடுத்தப்படத்தில் இருவரையும் ஒன்றாக நடிக்கவைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.