கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம்  ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Continues below advertisement


 






இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில், விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.


 



அதன் படி முதற்கட்டமாக, இந்தியாவில் முக்கியப் பாதைகளில் செல்லும் ரயில்களில் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் வரையபட்டுள்ளன.


 


 






அதே போல படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஐக்கிய அரபு அமீரகத்தில் அனிருத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முன்னிலையில் வருகிற மே முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். நிகழ்ச்சிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தப்படத்தில் கமலுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண