போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் நாக சைதன்யாவுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரும், தென்னிந்திய நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் ஆவார். இருவரும் 2021 இன் பிற்பகுதியில் தங்கள் 4 ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து பிரிந்தனர். இதற்கிடையில், ‘மாநாடு’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்தில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாக சைதன்யாவுக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளது. ஜூப்லி ஹில்ஸ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நாக சைதன்யா, டொயோட்டா வெல்ஃபயர் காரில் கருப்பு நிற ஷீல்டுகளை பயன்படுத்தியதற்காக ரூ.700 அபராதம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அபராத தொகையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
அபராதம் செலுத்திய பிறகு அவரது வாகனத்தில் இருந்த வண்ணத்திரைகளை போலீசார் அகற்றினர். சமீபகாலமாக இதே காரணத்துக்காக டோலிவுட் பிரபலங்களை ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மடக்கிப்பிடித்து வருகின்றனர்.
முன்னதாக ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் செலுத்தினர்.
நாக சைதன்யா அடுத்ததாக ஆமிர் கானுடன் இணைந்து 'லால் சிங் சத்தா' படத்தில் நடிக்கிறார். இது ஆகஸ்ட் 11 அன்று வெளியாகிறது. வெங்கட் பிரபுவுடன் பெயரிடப்படாத படம் மற்றும் இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்