இன்றைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ட்ரெண்ட் டாட்டூ. இதன் மீது நடிகர்களுக்கும் மிகுந்த மோகம் உள்ளது. நயன்தாரா, திரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா என பெரும்பாலான நடிகைகள் தங்களின் டாட்டூ ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். 


அந்த வகையில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் நடிகையான சமந்தா ரூத் பிரபு, தான் நடித்த முதல் படமான  'Ye Maaya Chesave' படத்தை குறிக்கும் வகையில் YMC என்ற டாட்டூவை தனது முதுகுப் பகுதியிலும், வலது இடுப்பு பகுதிக்கு மேலே தன் முன்னாள் கணவரின் பெயர் கொண்ட 'Chay' என்ற டாட்டூவை குத்தி கொண்டார். இந்தப் புகைப்படங்கள் ஏற்கெனவே சோசியல் மீடியாவில் படு வைரல்.


 



நடிகை சமந்தாவும் நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி திடீரென அவர்கள் இருவரும் பிரியப்போவதாக அறிக்கை மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்தனர். 


சமந்தாவின் டாட்டூ மோகம் :


சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தில் நாக சைதன்யாவின் செல்ல பெயரான Chay என்ற பெயரை டாட்டூவை குத்துக்கொண்டார் சமந்தா. பின்னர் சில காரணங்களால் 2021ம் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். கணவரை விட்டு பிரிந்து இருந்தாலும் Chay என்று குத்தப்பட்ட அந்த டாட்டூவை சமந்தா நீக்காமலிருந்தார். அவர்களின் பிரிவுக்கு பிறகும் பல போட்ஷூட்களில் அந்த டாட்டூ தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல முறை ரசிகர்கள் அவரிடத்தில் கேள்விகள் கேட்டு வந்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்ளது தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள். 


 



காணாமல் போன டாட்டூ :


துபாயில் நடிகை சமந்தா கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மக்களின் கவனம் பெற்றது. வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களில் சமந்தாவின் விலா எலும்பு பகுதியில் காணப்பட்ட Chay டாட்டூவை காணவில்லை. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்த போதிலும் அந்த டாட்டூ மிஸ்ஸிங் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர். ஒரு வேலை அவர் மேப் அப் மூலம் மறைந்துத்துள்ளாரா அல்லது முற்றிலும் நீக்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. 


முன்னாள் கணவரின் நினைவாக சமந்தா குத்திக்கொண்ட டாட்டூவை  நீக்கியதோடு நாக சைதன்யாவின் நினைவுகளையும் அழித்து விட்டாரா சமந்தா என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.


ஒரு ஆண்டு பிரேக் :


நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த குஷி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை சமந்தா ஒரு ஆண்டு காலம் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு ஓய்வு எடுக்க போவதாகவும் தனக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் பாதிப்புக்கு சிகிச்சை  பெறுவதற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள போகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் சமந்தா புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.