நடிகை சமந்தா அக்கினேனி. இவர்தான் சினிமா உலகின் லேட்டஸ் ஹாட் டாபிக். சமந்தாவும் நாக சைதன்யா அக்கினேனியும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் இல்லைப் பிரியப் போகிறார்களா? பரபரப்பான இந்தத் தகவலுக்காக ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது. இந்தச் சூழலில்தான் அண்மையில் நடிகரும் சமந்தாவின் மாமனாருமான நாகர்ஜூனா அவரது தந்தை நாகேஸ்வர ராவின் பிறந்தநாளை ஒட்டி ஒரு நினைவஞ்சலி வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோவைப் பார்த்த சமந்தா அதன் கீழே, இது மிகவும் அழகாக இருக்கிறது @iamnagarjuna என்று நாகர்ஜூனாவை டேக் செய்து தனது கருத்தைப் பதிவிட்டார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடனே அந்த ட்வீட்டை டெலீட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட்டார். இந்த முறை, இது மிகவும் அழகாக இருக்கிறது @iamnagarjuna மாமா, என்று மரியாதை அடைமொழியுடன் பகிர்ந்திருந்தார்.
சமந்தா, நாக சைதன்யா அக்கினேனிக்கும் இடையேயான பிளவுக்கு நாகர்ஜூனாவின் கோபம்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே நடிகைகள் பலரும் திருமணத்துக்குப் பின்னர் திரைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட சமந்தா ஒரு பெரிய நட்சத்திரக் குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டதாலோ என்னவோ தங்கு தடையின்றி நடிப்பைத் தொடர்ந்தார். ஓ பேபி தொடங்கி பல ஹிட் படங்களை அவர் திருமணத்துக்குப் பின்னர் கொடுத்தார். ஆனால், அவர் கடைசியாக மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து போராளியாக நடித்த ஃபேமிலிமேன் 2 சீரிஸில் அளவுக்கு அதிகமாக கிளாமராக நடித்தது குடும்பத்தில் புகைச்சலை உண்டாக்கியாதாகக் கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், சமந்தா தனது சமூகவலைதளப் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்ற பெயரை மாற்றி வெறும் S என்று மட்டும் வைத்துக் கொண்டார். இது இந்த சலசலப்புகளுக்கு தூபம் போட்டது. சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என்ற செய்திகள் மேலும் வலுப்பெறச் செய்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சமந்தா அண்மைக்காலமாகவே நாகசைதன்யாவுடனான புகைப்படங்க்ளை வெளியிடாததும் இந்த சந்தேகத்தை அதிகரித்தது. இந்நிலையில், அண்மையில் நாகசைதன்யா தான் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு சமந்தாவும் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு நாக சைதன்யா நன்றி சாம் என்று பதிவிட்டிருந்தார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவைப் பற்றி சமூக வலைதளத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பகிர்ந்த பதிவு இது. அண்மையில் திருப்பதி சென்ற அவரிடம் நிருபர் ஒருவர், கணவருடனான கருத்து வேறுபாடு குறித்து கேட்க கோபமடைந்த சமந்தார், நான் கோயிலுக்கு வந்துள்ளேன். புத்தி இருக்கிறதா என்று கேட்டுச் சென்றார்.