தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையான சமந்தா ரூத் பிரபு - நாக சைதன்யா திருமணம் 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற அவர்களின் திருமண விழாவில் சமந்தா ஒரு அழகான வெள்ளை லெஸி கவுன் அணிந்து இருந்தார். தற்போது ஒரு விருது நிகழ்ச்சிக்காக தன்னுடைய திருமண கவுனை பிளாக் ஸ்ட்ராப்லெஸ் காக்டெய்ல் கவுனாக மாற்றி வடிவமைத்துள்ளார். 


 



 


சமந்தாவின் பதிவு :



தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது பற்றி தெரிவித்துள்ளதுடன், மாற்றி வடிவமைக்கப்பட்ட திருமண கவுன் அணிந்து இருந்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். "எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். எப்போதும் நடக்க புதிய பாதைகள் உள்ளன. அவை புதிய கதைகளை சொல்ல வேண்டும். 


நிலைத்தன்மையை நம்மால் இனி தடுக்க முடியாது.  நாம் வீடு என அழைக்கும் இந்த கிரகத்தின் நீண்ட ஆயுளுக்கு இது இப்போது அவசியம். இன்று நான் அணிந்து இருக்கும் இந்த ஆடை, மிகவும் திறமையான  க்ரேஷா பஜாஜ் என்பவரால் இந்த சந்தர்ப்பத்திற்காக மாற்றி வடிமைக்கப்பட்ட அன்பான கவுன். 


 






 


அது பலருக்கும் முக்கியமானதாக தோன்றினாலும், உரிமையுடையதாக தோன்றினாலும் எனது பழக்கங்களை மாற்றுவதற்கும், எனது வாழ்க்கை முறையை மேலும் உறுதியானதாக மாற்றுவதற்காகவும் நான் மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ள பல படிகளில், என்னுடைய பழைய ஆடைகளை மீண்டும் தயாரிப்பதும் ஒன்றுதான் என்பதைக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு சின்ன சின்ன சைகையும், தீர்க்கமான செயலும் முக்கியமானது. அனைத்தும் அதனுடன் சேர்க்கிறது.  என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட உங்கள் அனைவரையும் இந்த சிறு முயற்சிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி" என சமந்தா பகிர்ந்துள்ளார். 


 



 


சமந்தா - நாக சைதன்யா பிரிவு :


சமந்தா - நாக சைதன்யா தம்பதி மிகவும் பிரமாண்டமாக 2017ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நான்கு ஆண்டு கால சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் சமந்தா - நாக சைதன்யா குறித்து 2021ஆம் ஆண்டு அறிக்கை மூலம் வெளியிட்டனர். இருவருமே அவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து எந்த ஒரு இடத்தில் இதுவரையில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருவருமே அவரவர்களின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். 


தற்போது நடிகை சமந்தா 'சிட்டாடல்' தொடரின் இந்திய பதிப்பான 'ஹனி பன்னி' என தலைப்பிடப்பட்டுள்ள வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.