ஹிந்தி பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சிக்காக அதன் தொகுப்பாளர்  நடிகர் சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி தொகுப்பாளராக சல்மான் கான் மீண்டும் வருகிறார். 14 வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்தியதற்காக நடிகருக்கு 350 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. 


பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் கடந்த 11 சீசன்களில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடருந்து இருந்து வருகிறார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவரது தனித்துவமான பாணி மற்றும் ஒரு திரைப்பட நட்சத்திரமாக அவரது புகழ் ஒவ்வொரு சீசனிலும் மேலும் கண்களை ஈர்க்க நிகழ்ச்சிக்கு உதவுகிறது.


ஒவ்வொரு சீசனிலும் சல்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக அதிக தொகை வசூலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. ரியாலிட்டி ஷோவில் அதிக சம்பளம் வாங்கும் சல்மான், கடந்த ஆண்டு பிக்பாஸ் 14 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஒரு சீசன் 4 முதல் சீசன் 6 வரை நடிகருக்கு 2.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. பிக்பாஸ் 13 சீசனுக்கு, அவர் வாரத்திற்கு ரூ.13 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், இந்த சீசனில், சல்மான் கானுக்கு சம்பளமாக 14 வாரங்களுக்கு ரூ. 350 கோடி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது வாரத்திற்கு ரூ. 25 கோடியாகும்.


 






பிக் பாஸ் இந்திய தொலைக்காட்சியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய சீசனில் பிரபலங்கள் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 15 சீசனின் தொகுப்பாளர் சல்மான் கான் உறுதி செய்யப்பட்டாலும், புதிய சீசனின் வடிவம் மற்றும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு யூகங்கள் உள்ளன. பிக்பாஸ் 15 சீசன் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு ஒளிபரப்பாகும் என்றும்,  ஒவ்வொரு எலிமினேட்டிலும்,  ஒரு புதிய வைல்ட் கார்டு போட்டியாளர் வீட்டிற்குள் நுழைவார்கள் எனவும் கூறப்படுகிறது.


முன்னதாக, தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக அதன் தொகுப்பாளர் கமல்ஹாசன் 60 கோடி ருபாய் சம்பளமாக பெற போகிறார் என தகவல் வெளியானது. தெலுங்கில் தற்போது பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. சீசன் 4இல் அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Bigg Boss Kamal Salary: கமல் சம்பளம் ரூ.60 கோடியா....? - பிக்பாஸ் புதிய ப்ரோமா ரிலீஸ்!