பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக அதன் தொகுப்பாளர் கமல்ஹாசன் 60 கோடி ருபாய் சம்பளமாக பெற போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். முதல் சீசனில் அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் இந்த நிகழ்ச்சியின் சீசனுக்கு சீசன் தொகுப்பாளர் மாறிய நிலையில், தமிழில் மட்டுமே தொடர்ந்து கமல்ஹாசன் இருந்து வருகிறார். ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பாக, அடுத்த சீசனுக்கு கமலுக்கு பதில் இந்த ஹீரோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று தகவல் வெளியாகும். ஆனால், அதன்பிறகு கமல்ஹாசன் தான் சீசனை தொகுத்து வழங்குவார். ரசிகர்களும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை விரும்புகின்றனர்.


தற்போது, பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுதொடர்பான ப்ரோமாக்கள் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கல்யாண வீடு, சமையல் என விதவிதமாக வெளியான ப்ரோமோக்களில் கமல்ஹாசன் கலக்கியிருக்கிறார். இதெல்லாம், ஒருபுறமிக்க, இந்த சீசன் தொடர்பாக கமல்ஹாசன் சம்பளம் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அவர் இந்த சீசனுக்காக 60 கோடி ரூபாய் சம்பளமாக பெறப் போகிறாராம். தெலுங்கில் தற்போது பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. சீசன் 4இல் அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பிக்பாஸ் சீசன் 5இன் புதிய ப்ரோமா ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.






 


பல்வேறு துறைகளிலும் மிகவும் பிரபலமான 30 நபர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களில் இருந்து இறுதிகட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 சீசன்களிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும், பல்வேறு புதிய விதிகள் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக பல்வேறு புதிய அம்சங்களுடன் பிக்பாஸ் வீடு அரங்கு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் யார்? யார் ? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதமே நடைபெற்று வருகிறது. 


Bigg Boss 5 Tamil: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி..?