டைகர் 3


மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான்  நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில்  தற்போது கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் நேற்று வெளியானது.


முதல் நாள் வசூல்


சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஷாருக் கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இதனால் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக கிளம்பி செல்கிறார்கள். தீபாவளியை முன்னிட்டு வெளியான டைகர் 3 முதல் நாளில் மட்டும் இந்தியளவில் 40 கோடி வசூல் செய்துள்ளது.


திரையரங்கத்தில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்


சல்மான் கான் படம் வெளியாகிறது என்றால் அதிலும் குறிப்பாக தீபாவளித்  நாளில் வெளியாகும்போது ஒவ்வொரு முறையும் பெரிய சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. முன்பு ஒருமுறை சல்மான் கான் நடித்த அந்திம் படம் வெளியான போது ரசிகர்கள் திரையரங்கத்திற்குள் பட்டாசு வெடித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தனது ரசிகர்களுக்கு சல்மான் கான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். தற்போது டைகர் 3 படத்திற்கும் ரசிகர்கள் திரையரங்கத்திற்குல் பல்வேறு வகையான பட்டாசுகள் வெடித்து மக்கள் பதற்றத்திற்கு ஆளாக்கி இருக்கிறார்கள். ராக்கெட் வானவெடிகள் முதலிய பட்டாசுகளை திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வெடிக்க சுற்றி இருந்த மக்கள் அச்சமடைந்து தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து ஓடும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.  குறிப்பாக இந்த நிகழ்வுகளுக்குப் பின் சல்மான்கான் ரசிகர் மன்றத்திற்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த கடுமையான கண்டங்களை மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.