பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சல்மான் கான் தன் பாண்ட் பாக்கெட்டில் க்ளாஸ் டம்ளரை வைத்தபடி  விழா ஒன்றுக்கு வந்த வீடியோ ட்ரெண்ட் ஆகியுள்ளது.


மேலும் இந்த க்ளாஸ் டம்ளரில் இருந்தது தண்ணீரா அல்லது மதுவா என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


முன்னதாக பாலிவுட் பிரபலம் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு சல்மான் கான் வருகை தந்த நிலையில், அவர் காரில் இருந்து வெளியே இறங்குவதும், அப்போது தன் பாண்ட் பாக்கெட்டில் கண்ணாடி கிளாஸை சொருகியபடி வருவதும் வீடியோவாக இணையத்தில் வெளியானது.


 






மேலும் தன் கையால் அந்த கிளாஸை சல்மான் மறைக்கும்படியான செய்கையிலும் சல்மான் வீடியோவில் ஈடுபடும் நிலையில், தம்ளரில் இருந்தது தண்ணீரா அல்லது வோட்காவா என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


கடந்த 2002ஆம் ஆண்டு குடிபோதையில் சாலையில் தூங்கியவர்கள் மீது சல்மான் கான் கார் ஏற்றிக்கொன்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் போதிய ஆதாரமில்லை எனக்கூறி 2015ஆம் ஆண்டு வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


 






சல்மான் கான் நடிப்பில் விரைவில் கிஸி கா பாய், கிஸி கி ஜான் படம் வெளிவர உள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின் சல்மான் கான் நடிப்பில் வெளிவர உள்ள இப்படத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.