கேஜிஎஃப் 1 மற்றும் 2 பாகங்களின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்று பிரமாண்ட மாஸ் இயக்குநராக உருவெடுத்துள்ள பிரஷாந்த் நீல், பான் இந்திய நடிகரான பிரபாஸை வைத்து எடுத்துள்ள திரைப்படம் ‘சலார்’ பாகம் ஒன்று. பிரபல மலையாள பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கேஜிஎஃப் கன்னட சினிமாவின் மார்க்கெட்டை புரட்டிப்போட்டதுடன் இந்திய சினிமாவின் திருப்புமுனை படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் மூலம் தன் வெற்றியை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நேரடியாக தெலுங்கில் களம் இறங்கியுள்ளார். ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ரவி பர்சூர் இசையமைத்துள்ளார்.
பாகுபலிக்குப் பிறகு பான் இந்திய படங்களில் வரிசைகட்டி நடித்தாலும் வரிசையாகத் தோல்விகளையே தழுவி வரும் பிரபாஸூக்கு, இந்த மாஸ் கூட்டணி வெற்றியைத் தருமென ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்று வெளியாகியுள்ள இப்படம் பிரபாஸூக்கு திருப்புமுனை தந்ததா? கேஜிஎஃப் இயக்குநர் என்ன செய்திருக்கிறார்? நெட்டிசன்கள் சொல்வது என்ன எனப் பார்க்கலாம்!
“டீசண்டான முதல் பாதி. வெகு சுமாரான இரண்டாம் பாதி. பிரபாஸ், ப்ரித்திவிராஜின் திரை ஆளுமை சூப்பர். ஆனால் பிரஷாந்த் நீல் கேஜிஎஃப் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார். தெலுங்கு ரசிகர்களுக்கு ஒர்க் அவுட் ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.
“முதல் பாதி வழக்கமான பிரஷாந்த் நீல் படம். ஒரே பில்டப் தான். படத்தில் பல கேரக்டர்கள் நிறைய எரிச்சலூட்டுகிறார்கள். ஒளிப்பதிவு கேஜிஎஃப் போலவே உள்ளது” எனக் கூறியுள்ளார்.
“பிரபாஸ் மிக மோசமாக நடித்துள்ளார். படம் நன்றாக உள்ளது. ஆனால் கொடுத்த பில்டப் அளவுக்கு படம் இல்லை” எனக் கூறியுள்ளார்.
“பிரபாஸூக்கு மாஸ் கம்பேக். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.
“பாசிட்டிவாக படத்தில் எதுவும் இல்லை. பிரஷாந்த் நீல் ஈர்க்கத் தவறிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.