கேஜிஎஃப் பாகங்களின் மூலம் பிரமாண்ட இயக்குநராக உருவெடுத்த பிரஷாந்த் நீல் இயக்கத்தில், மீண்டும் ஒரு மாஸ் ஆக்‌ஷன் பேக்கேஜாக உருவாகியுள்ள சலார் பாகம் 1 (Salaar Part 1 CeaseFire) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்க, பிருத்விரஜ் சுகுமாரன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காந்தாரா, கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.


2 நண்பர்களின் கதை


இரு வர்க்கத்தைச் சேர்ந்த நண்பர்கள், அவர்களின் பிரிவு, ஆக்‌ஷன், நட்பு ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கேஜிஎஃப் படத்தைப் போல பில்டப் காட்சிகளுடன் ட்ரெய்லர் வெளியான நிலையில், கேஜிஎஃப் யுனிவர்சில் இப்படம் ஒரு அங்கமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.


கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து ரசிகர்களைப் பெற்ற ரவி பர்சூர் தான் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். இவர்கள் தவிர, ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிரபாஸூக்கு இத்தனை கோடிகளா!


பாகுபலி படத்துக்குப் பின், பான் இந்திய படங்களில் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சலார் வெளியாகியுள்ளது. படத்துக்கு கலவையான விமர்சனங்களை முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே சலார் படத்துக்காக படக்குழு பெற்ற சம்பள விவரம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


சுமார் 400 கோடிகள் பட்ஜெட்டில் சலார் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், பிரமாண்ட மாஸ் நாயகனாக உருவெடுத்துள்ள பிரபாஸ் இந்தப் படத்துக்காக் ரூ.100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பிற நடிகர்களின் சம்பள விவரம்


அது மட்டுமில்லாமல் படத்தின் லாபத்தில் 10 சதவீதத்தையும் அவர் சம்பளமாகப் பெறுவார் எனக் கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர். பான் இந்தியா நடிகராகவும், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும் பிரபாஸ் உருவெடுத்துள்ள நிலையில் அவருக்கு இது சாதாரணம் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.


அடுத்ததாக, படத்தில் பிரபாஸின் நண்பராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ரூ.4 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்துக்காக ரூ.8 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளாராம். மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு ரூ.4 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளாராம்.


கேஜிஎஃப் மூலம் கன்னட சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு ரூ.50 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்!