நடிகை சாய் பல்லவி மாறு வேடத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து சினிமா பார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர், 'நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழி கொண்டவர் நடிகர் நானி. இவரது நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம், ஷியாம் சிங்கா ராய். 


நிஹாரிகா என்டெர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தை இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில், நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படத்தில் சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 






தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.


இந்நிலையில் படத்தை தனது நண்பருடன் சென்று திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார் சாய் பல்லவி. இதற்காக அவர் கண்களை மட்டும் காட்டும் அளவுக்கு புர்கா உடையை அணிந்து சென்றார். அவர் மீது யாருக்கும் சந்தேகம் வராததால் அவர் படத்தை ரசித்துப் பார்த்துத் திரும்பியுள்ளார். இடைவேளையின் போது பாப்கார்ன் சாப்பிட்டது என சில பல செல்ஃபிகளையும் கிளிக்கி மகிழ்ந்துள்ளார். அவர் திரையரங்கில் இருந்து வெளியே வரும்போது படம் எப்படி எனக் கருத்து கேட்கப்படுகிறது. அதை அமைதியாகக் கடந்து வரும் அவர், காரின் அருகே வந்ததும் மட்டும் திரையை விலக்கி தனது அழகு முகத்தையும் அடையாளத்தையும் காட்டி சிரிக்கிறார். ஆனால் சுற்றி உள்ளவர்கள் சுதாரிக்கும் முன் கார் சர்ரென கிளம்பினார். அந்த வீட்டியோ தற்போது யூடியூபில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது.


திருட்டுக் கதையா? சொந்தக் கதையா?



படத்தின் கதை இதுதான். நாயகன் நானி (வாசு தேவ் காண்ட்டா) குறும்படம் இயக்க வேண்டும் என்ற கனவோடு வாழும் ஒரு துடிப்பான இளைஞர். ஆனால் குடும்பப் பின்னணியோ மிகச் சாதாரணமானது. பல கனவுகளோடு அவனுடைய கதையை இயக்குவதற்கான வேலையை துவங்குகிறார். சொந்த முயற்சியில் அவனுடைய கதைக்காக பல நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறான். ஒரு வழியாக குறும்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துவிடுகிறார்.


குறும்படத்தின் படப்பிடிப்பில் நானிக்கு தலையில் அடிப்பட்டு சிறிய காயம் ஏற்படுகிறது. அந்த வேளையில், நைஸாகப் பேசித் தயாரிப்பாளரிடம் முழுநீள படத்திற்கு கதை சொல்லி ஒப்புதல் வாங்கிவிடுகிறார். நானியின் அந்த முழுநீளப் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவிடுகிறது. 


பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அந்தப் படத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்யத் திட்டமிடுகின்றனர்.


ஆனால், அப்போது தான் ஒரு சிக்கல் எழுகிறது. இந்தக் கதை எழுத்தாளர் ஷியாம் சிங்கா ராயின் கதை, இதனை இயக்குனர் எந்த அறிவிப்பும் இல்லாமல் இயக்கிவிட்டதாக குற்றஞ்சாட்டி வழக்கு தொடரப்படுகிறதுது.


இறுதியில் நானி இயக்கிய கதை திருட்டுக் கதையா? சொந்தக் கதையா? வழக்கை எப்படி நானி சமாளித்தார்? நானிக்கும் ஷியாம் சிங்கா ராய்க்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.