கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  வெளியிட்டுள்ளார் இயக்குநர் சங்கர் தயால்.


சங்கர் தயால்


பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கார்த்தி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பையா , நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் , சிறுத்தை என அடுத்தடுத்தப் வெற்றிப் படங்களைக் கொடுத்தார் கார்த்தி. இதனைத் வெறும் ஐந்தே படங்களில் ஸ்டார் அந்தஸ்து அவருக்கு கிடைத்துவிட்டது. அவரது ஆறாவது படமாக உருவான படம்தான் சகுனி. சங்கர் தயால் இந்தப் படத்தை இயக்கினார். சந்தானம் , ப்ரனீதா, சந்தானம் , பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், கோட்ட ஸ்ரீனிவாச ராவ் ,   நாசர் , ரோஜா , மனோபாலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 1150 திரையரங்குகளில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியானது.


ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆஃபிஸின் சொதப்பியது.


இந்தப் படம் கார்த்தியின் முதல் பெரிய தோல்வியாக அமைந்தது.  அரசியல் பகடியாக எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை  கவர்ந்திருந்தாலும் கார்த்தியின் முந்தைய படங்களால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததே இந்தப் படத்தின் பின்னடைவாக கருதப்பட்டது.


இதனை அடுத்து 4 ஆண்டுகள் கழித்து விஷ்ணு விஷால் நடிப்பில் வீர தீர சூரன் படத்தை இயக்கினார். ஆனால் இந்தப் படமும் தோல்வியைத் தழுவியது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து தனது அடுத்தப் படத்தின் தகவலை வெளியிட்டுள்ளார் சங்கர் தயால்.


இந்தப் படத்திற்கு குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது


குழந்தைகள் முன்னேற்ற கழகம்






மீனாக்‌ஷி அம்மல் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சகுனி படத்தைப் போலவே இந்தப் படமும் அரசியல் பகடியை கதைக்களமாக கொண்டிருக்கும் என்று படத்தின் டைட்டிலை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய  கதை ஒன்றில் வழியாக சங்கர் தயால் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம்.




மேலும் படிக்க : Kamal Haasan: சீனியர் பிரபுதேவா சுந்தரம் மாஸ்டருடன் ஒற்றைக் கால் ஸ்டெப்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி!