நடிகர் விஜய்  நடித்துள்ள வாரிசு படத்தை பார்த்த ரசிகர்கள், விஜய் அப்படத்தில் நடிக்க அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான் காரணமா என கேள்வியெழுப்பியுள்ளனர். 


இதேபோல் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியானது. வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது. 


முன்னதாக வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று இரவு திரையிடப்பட்டது. இதில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்யின் அம்மா ஷோபா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படம் பார்த்த பலரும் பேமிலி என்டெர்டெயினர் என்றும், விஜய் ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்கியுள்ளார் என்றும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.






அதேசமயம் விஜய் ரசிகர்களுக்கு வசீகரா தொடங்கி மாஸ்டர் வரையிலான மேனரிசங்களை காட்டி விஜய் ஆச்சரியமளித்துள்ளார். ரஞ்சிதமே பாடலில் நான் ஸ்டாப் ஆக ஒன்றரை நிமிடம் ஆடி தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இதனிடையே வாரிசு படத்தின் ட்ரெய்லர் அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகளை கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், படத்தில் அப்பா - மகன் உறவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் படத்தின் இறுதிக்காட்சியில் அப்பா சரத்குமாரிடம், “நீங்க காட்டுன வழியில நான் நடக்கலன்னாலும்... எனக்கு நடக்க கத்துக் கொடுத்தது நீங்கதானே” என விஜய் வசனம் பேசுவார். அதேபோல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் பல வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது.


ஒருவேளை விஜய் தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்காக இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டாரா என பலரும்  கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் திரையில்  தந்தை - மகன் சென்டிமென்ட் காட்சிகளை பார்க்கும் போது  விஜய் - எஸ்.ஏ.சி தான் நினைவுக்கு வருவதாக கூறியுள்ளனர்.