S.J.Suryah - Vignesh Shivan: எல்.ஐ.சி முதல் நாள் ஷூட்டிங்: விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஜே.சூர்யா!

இயக்குநர் விக்னேஷ் சிவனைப் புகழ்ந்து எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Continues below advertisement

ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

Continues below advertisement

‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார்.

மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, சீமான் கௌரவக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவுடி பிச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இளைஞர்களைக் குறிவைத்து காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு. கடந்த டிச.15ஆம் தேதி தொடங்கி முழு வீச்சில்  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விக்னேஷ் சிவனை வெகுவாகப் புகழ்ந்து எஸ்.ஜே.சூர்யா தற்போது பதிவிட்டுள்ளார்.  “இந்த அன்புக்கு நன்றி இயக்குநர் விக்னேஷ் சிவன் சார். எல்.ஐ.சி படத்தில் எனது முதல் நாள் ஷூட்டிங். நான் மிகவும் எஞ்சாய் செய்தேன். படப்பிடிப்பின் போது, என் பர்ஃபாமென்ஸில் நீங்கள் கேட்டுக்கொண்ட நுணுக்கங்களை எல்லாம் நான் மிகவும் ரசித்தேன். அடுத்தடுத்த படப்பிடிப்புக்காக நான் காத்திருக்கிறேன். நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் இந்த சீனுக்காக எனக்கு கொடுத்துள்ள லுக் வாவ்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

இயக்குநராகவும் சரி, நடிகராகவும் சரி தனக்கென தனி பாணி கொண்டு கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவனை இப்படி  உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ள பதிவு இணையத்தில் தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola