எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் ’’ஆர்ஆர்ஆர்’’. சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வேட்டையாடி வருகிறது. சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்ட இப்படமும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது இதற்கு முன்னர் 24 ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்து இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'முத்து' திரைப்படத்தின் வசூலையும் முறியடித்து முன்னிலை வகிக்கிறது. 



லாஸ் ஏஞ்சல்ஸில் ஆர்ஆர்ஆர் :


சமீபகாலமாக சர்வதேச அளவில் இந்திய படங்களுக்கு வரவேற்பு அதிகமாகி வருகிறது. அதிலும் ஜப்பானில் நமது படங்களுக்கு வரவேற்பே வேறு விதமாகத்தான் இருக்கும். அங்கு ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு தனி மவுசு உள்ளது என்பதை நிரூபித்தது ரஜினிகாந்தின் முத்து திரைப்படம். அந்த படத்தின் வெற்றியை முறியடித்து இமாலய சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் அடுத்ததாக களம் இறக்கப்படுவது லாஸ் ஏஞ்சல்ஸில். ஜனவரி 9ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்படவுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம். இதில் இப்படத்தின் பெரும் தூண்களான எஸ்எஸ் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் மற்றும் எம்எம் கீரவாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.






ஆஸ்கார் விருது 2023 : 


எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதை தொடர்ந்து அதன் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இது அங்குள்ள பார்வையார்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பியோன்ட் ஃபீஸ்ட்டின் ஒரு பகுதியாக 'encoRRRe' ஜனவரி 9ம் தேதி TCL சைனீஸ் ஐமாக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. அந்த ஷோவில்  932 பேர் அமரக்கூடிய சீட்களின் டிக்கெட்கள் 98 வினாடிகளில் விற்று தீர்ந்தது.


'இது வரையில்  எந்த ஒரு இந்திய படத்திற்கும் இதற்கு முன்னர் இது போல திரையிடல் அமைந்ததில்லை' என பியோன்ட் ஃபீஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்திய திரைப்படங்களின் வலராற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என குறிப்பிட்டனர். 






கோல்டன் குளோப்ஸ் 2023 விருது :


எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகெங்கிலும் வெளியிடப்பட்டதில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து மேலும் சிறப்பாக திரையிடப்பட்டு வருகிறது. 2023ல் நடைபெறும் ஆஸ்கார் விருதுக்கு 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு முன்னர் நடைபெறும் கோல்டன் குளோப்ஸ் 2023 விருது ஒரு சிறந்த வழங்கும் விளைவாக கருதப்படுகிறது. அந்த விழாவிலும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர்.  கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுகளுக்கு இரண்டு பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு;அது என்பது குறிப்பிடத்தக்கது.