RRR Release Date: இந்த தேதிகள் எங்களோடது.. வெளியானது ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதிகள்.. அதகளத்தில் சோசியல் மீடியா..!

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், “ ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதியில் ரிலீஸ் ஆகும். இந்த இரண்டு தேதிகளும் படக்குழுவால் ப்ளாக் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

 

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் தயராக இருக்கிறது.

படத்தின் முன்னோட்டம், மேக்கிங் வீடியோ, ட்ரெய்லர் ஆகியவை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement