ஊரே கூடி கும்பியடித்த ஜோடி, ரவுடி பேபி சூர்யா-சிக்கா. இருவரும் தங்கள் குடும்பத்தை பிரிந்து, பரஸ்பரம், கடந்த 2 ஆண்டுகளாக கூடி மகிழ்ந்திருந்தனர். ஆளுக்கொரு யூடியூப் சானல் நடத்தி வந்த நிலையில், இருவரும் இணைந்த பின்னும், பரஸ்பரம், ஒருவருக்கொருவர் அதற்காக உதவிக்கொண்டனர். திருப்பூரில் இருந்த ரவுடி பேபி சூர்யாவை, தனது சொந்த ஊரான மதுரை திருநகருக்கு அழைத்து வந்து சமீபத்தில் குடியமர்த்தினார் சிக்கா.
அதன் பிறகும் ஜோடிக்கிளிகள் சிறகடித்து பறந்த நிலையில், திடீரென லைவ் பிரேக் அப் ஆனது. அதற்கு காரணமாக, சிக்கா அவரது முந்தைய மனைவியுடன் இணைய முடிவு செய்து, சூர்யாவை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவுடிபேபி சூர்யா, துபாய்காரர் ஒருவரிடம் தனது வாழ்க்கையை தொடங்கப் போவதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதோ அந்த வீடியோவில் சூர்யா பேசியது...
‛‛மக்களிடம் நல்லவன் போல காட்டுவதற்காக, என்னை காப்பாற்ற இங்கே வருவதா சொல்லிக்கிற. இருந்தா ஒழுக்க ம...(ஃபீப்) இரு. இல்லைன்னா ஓடிரு. நீ உன் குடும்பத்தோடு வாழு... இல்லை... என்னை எவன் கூடவாவது வாழ விடு! ரெண்டும் கெட்டானா, அவன் கூடையும் வாழ விடமாட்ற... நீயும் வாழ மாட்டுற. சும்மா சும்மா அப்பப்போ வந்து போறதா? இந்த பந்தாவெல்லாம் காட்டாத. நேற்று வந்தான், அப்புறம் போன் அடிக்கிறேன் எடுக்க மாட்றான்.
தயவு செஞ்சு குடும்பத்தோட வாழ்ந்துக்கோ... இல்லை... என் குடும்பத்தோட வாழ விடு. சும்மா சும்மா தொல்லை பண்ணாத. நான் திருப்பூர் போகத்தான் போறேன். அவன்(கணவர்) வர்றவனையும், வரக்கூடாதுனு சொல்லிட்ட. அவன்(சிக்கா) யாரு, என் பொண்டாட்டியை உரிமை கொண்டாடுறான்னு, அவன்(கணவர்) கேக்குறான். எல்லா வீடியோவும் அவன்(கணவர்) பார்த்துட்டு தான் இருக்கான். உனக்கு மட்டும் குடும்பம் வேணும், நான் மட்டும் நடுத்தெருவில் நிற்கணுமா? என்ன சொல்றதுனு தெரியல.
சீரழிந்து சின்னாபின்னமா இருக்கேன். கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு போனா, எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம் உழைச்சு சம்பாதிக்கணும்னு தான் யூடியூப்ல இருக்கேன். வாழ்க்கை ஒரே குழப்பமாக இருக்கு. திருப்பூரில் நிம்மதியா இருந்தேன்; சிக்காவுக்காக மதுரை வந்தேன். எனக்கு பாதுகாப்புனா மட்டும் இவன் வருவானாம். நீ என்ன பாதுகாப்பு தர்றா... நான் என் பாதுகாப்புக்கு யாரையாவது ஏற்பாடு செய்துக்க முடியாதா..!
2 ஆண்டுகளாக காதல் என ஏன் பண்ணனும்? இரண்டு வருஷம் நான் சம்பாதித்ததை நல்லா தின்னான். இப்போ என்னை இங்கே கூட்டி வந்துவிட்டு, அவன் அவனோட குடும்பத்தோட போன எப்படி? இப்போ நினைச்சாலும் என்னால இன்னொரு லைஃப் உருவாக்க முடியும். இவன் என்னமோ.. குடும்பத்தோட போறேன் போறேன்னு சொல்றான். நானா உன் குடும்பத்தை பிரிச்சேன். எனக்கு நல்ல லைஃப் இருந்திருக்கும்; நானே கெடுத்துட்டேன்.
காலம் போன கடைசியில் ஒரு கிழவனை பிடித்துக்கிட்டு, வெளியே போனா உங்க தாத்தாவா, அப்பாவானு கேட்டாங்க. எனக்கு அவ்வளவு அசிங்கமா இருந்துச்சு. இந்த மாதிரி உடம்பு இருக்கும் போதே, இவனுக்கு இவ்வளவு ஆட்டம். துபாய்காரன் 4 மாசத்துல வந்துடுவான். நான் பார்த்துக்கிறேன் இனி என் வாழ்க்கையை. இனிமே சூர்யா... வாறீயா. வந்த.. அவ்வுளதான்..! நீ எவ்வளவு பெரிய கேடினு, நான் போனதும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்.
இரண்டு வருசம் அவனுக்கு வருமானம் இல்லை. என் யூடியூப் நல்லா வருமானம் வந்ததும், என்னிடம் வந்தான். சுயநலத்திற்காக என்னிடம் வந்தான். போ... போய் உன் வாழ்க்கையை பாரு... என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்! இரண்டு வருஷம், நல்லா ஜாலியா இருந்தான்... நல்லா அனுபவிச்சான்; இப்போ போய்டான். தாலி கட்டாத குடும்பம், நல்லாவே இருக்காது.
இதோ ரவுடிபேபி சூர்யாவின் அந்த வீடியோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்