பெண்கள் ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் அதைப் பற்றி நாம் குறை சொல்ல தேவையில்லை என்று நடிகர் ரஞ்சித் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.


விஜய் ஆண்டனி 


 இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்  விஜய் ஆண்டனி.  இந்தியா பாகிஸ்தான்  , பிச்சைக்காரன் ,சைத்தான், நான் , உள்ளிட்டப்  பல படங்களில் நடித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் நடித்துள்ள படம் ரோமியோ. ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகிறது. விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான குட் ஈவில் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரெட்ஜயண்ட் மூவீஸ் இந்தப் படத்தின் தமிழகத்தில் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. தெலுங்குவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் கன்னடத்தில் ஹான்பெல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். மூன்று மொழிகளிலும் சேர்த்து 500 திரையரங்குகளுக்கும் மேலாக இப்படம் வெளியாக இருக்கிறது.  திருமணத்தில் விருப்பமில்லாத நாயகி அவரை திருமணம் செய்து தன்னை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் என ரொமாண்டிக் காமெடியாக உருவாகி இருக்கிறது இப்படம். தற்போது இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்கள் படக்குழுவினர்,


 நடிகர் ரஞ்சித் கருத்துக்கு பதில்


இந்நிலையில், கடந்த சில மாதங்கள் முன்பாக நடிகர் ரஞ்சித் சென்னை, மதுரை போன்ற ஊர்களில் வாரந்தோறும் நடக்கும் ஹாப்பி ஸ்ட்ரீட் என்கிற நிகழ்வை விமர்சித்துப் பேசியிருந்தார். இந்த நிகழ்வில் பெண்கள் அறைகுறையாக ஆடை அணிந்து ஆடுவதை விமர்சித்த அவர் இந்த மாதிரியான நிகழ்வுகள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.


இதுதொடர்பாக நடிகர் விஜய் ஆண்டனியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் “காசு இருக்கவங்க ஸ்டேஜ் போட்டு கான்சர்ட் நடத்துவாங்க. காசு இல்லாதவங்க இந்த மாதிரி ரோட்டுல நடத்துறாங்க. நம்ம மனசுக்கு புடிச்சது எதுவா இருந்தாலும் அது இன்னொருத்தர பாதிக்காது என்றால் அதை நாம் தைரியமாக செய்யலாம்.


அந்த நிகழ்வில் ஒரு சிலர் சிறிய ஆடைகளை அணிந்திருக்கலாம். அதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பெண்களையும் தவறாக சித்தரிக்க தேவையில்லை. அதுமட்டுமில்லாமல் ஆடை அணிவது பெண்களின் செளகரியம், அதைப் பற்றி நாம் கருத்து தெரிவிக்க தேவையில்லை. உங்களுக்கு பிடிக்கலனா கண்ண முடிக்கோங்க” என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.




மேலும் படிக்க : Vettaiyan: ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபரில் ரிலீஸ்.. மாஸ் அப்டேட் தந்த லைகா!