இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி வசூலிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். சரி அதல்லாம் இருக்கட்டும் நம்ம தளபதி விஜய் இதுக்கு முன்பாக என்ன மாடல் சொகுசு கார் வச்சிருக்காங்கன்னு ஒரு விசிட் விடலாம் வாங்க!




1.ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் :


100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் நிறுவனம்தான் ரோல்ஸ் ராய்ஸ். விஜயிடம் முன்னதாகவே  ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் ஒன்று உள்ளது. இந்த வகை கார்களை RR என சுருக்கமாக அழைக்கின்றனர். விஜய் தவிர இன்னும் சில கோலிவுட் பிரபலங்களிடமும் இவ்வகை கார்கள் உள்ளன. இதன் விலை ரூ.2.5 கோடி . இந்த கார் 6.6 லிட்டர் இரட்டை  டெர்போ எஞ்சின் மூலம் 570 பிஹெச்பி மற்றும் 780 என்எம் சலுகையுடன் இயங்குவதாக கூறப்படுகிறது.





2.ஆடி எ8 (Audi A8)


ஒரு விலை உயர்ந்த காரை தினமும் பயன்படுத்த விரும்பினால், அவர்களில் தேர்வு ஆடியாகத்தான் இருக்கும்.  இதன் விலை ரூ .1.17 கோடி ஆகும் . இது ஜெர்மன் கார் உற்பத்தியாளர்களால் கலை நுட்பத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கப்படும் ஒரு படைப்பாகும். இதன்  அடுத்த பதிப்பான ஆடி எ8.எல்லாமானது.  இதைவிட நீளமான சக்கரங்களை கொண்டிருக்கும். அவ்வகை கார்களை நிறைய பாலிவுட் பிரபலங்கள் தன்வசப்படுத்தியுள்ளனர்.அதன் விலை 1.58 கோடியாகும்





3.பிம் எம் டபிள்யூ (BMW X5 and X6)


விஜய்  BMW X5  மற்றும் BMW X6 என இரண்டு கார்களை வைத்துள்ளார். விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம், ஆனால் அவர் ஒரு தீவிரமான BMW கார் ரசிகர். ஒரு ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரண்டு BMW  கார்களை விஜய் வாங்கியுள்ளார். இவ்வகை கார்கள் டீசல் மூலம் இயங்கக்கூடியவை. BMW X6  பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது.  BMW X5 ஆனது ₹  88 லட்சத்திற்கும்  BMW X6  ஆனது  ₹ 96.03 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.




4.மினி கூப்பர் எஸ்


ஆடம்பர கார் பிரியர்களின் நம்பர் ஒன் தேர்வாக இது உள்ளது. ஸ்போர்டி லுக்குடன் இருக்கும் மினி கூப்பர்ஸ் , சொகுசான பயணங்களை இதன் உரிமையாளருக்கு வழங்கும் என்பதுதான் டேக் லைன். விஜய்யை தவிர அமிதாப்பச்சன், மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களும் இந்த காரை வைத்துள்ளனர். பெட்ரோல் மூலம் இயங்கும் இவ்வகை கார்களின் விலை இந்தியாவில் 34.77 லட்சமாக உள்ளது.





இத்தனை கார்கள் இருந்தும், புதிதாக ஒரு கார் வந்து, அதற்கு வரி விலக்கு கேட்கப் போய், தற்போது சர்சையில் சிக்கியுள்ளார் விஜய்.