ஒவ்வொரு சீரியலையும் ஒவ்வொரு கதைகரு கொண்டு செல்லும். ரோஜா சீரியலில், அனு அந்த வீட்டு பெண் இல்லை ஏறக்குறைய நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அவர், அந்த குடும்பத்தை பழிவாங்க, வக்கீலுடன் இணைந்து திட்டம் போடுகிறார். இதனிடையே நீலாம்பரி செய்த குற்றத்திற்கு எதிராக ரோஜாவும் சிறுவயதாக இருந்தபோது சாட்சி சொல்லிய நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் புதுவில்லியாக அவர் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால், யாருக்குமே நீலாம்பரி எப்படி இருப்பார் என்பது தெரியாது. நீலாம்பரி சிறையில் இருந்து தற்போது விடுதலையாகி இருக்கிறார். சூழ்நிலை இப்படி இருக்க, ரோஜா சிறுவயதில் தங்கியிருந்த ஆசிரமத்தின் சாந்தமூர்த்திக்கு மட்டும் நீலாம்பரி யார் என்பது தெரியும். ஆனால் அவரும் இப்போது மருத்துவமனையில் தங்க வைத்திருக்கிறார்கள்.
1000 எபிசோடுகளை கடந்த ரோஜா சீரியல்:
அவரை கொல்ல வரும் நீலாம்பரி தனக்கு எதிராக சாட்சி சொன்னது யார் என கேட்க, அதை சொல்ல மறுக்கும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முற்படுகிறாள். அந்த நேரத்தில் அர்ஜூனும் ரோஜாவும் அங்கு வந்து விட, அங்கிருந்து அவர் கிளம்புகிறார். அப்போது சாந்தமூர்த்தி அவரது கையை பிடித்து இழுக்கிறார். அத்துடன் அந்த ப்ரோமோ முடிவடைகிறது.
இந்தப் ப்ரோமோ தற்போது நீலாம்பரி மாட்டிக்கொள்வாரா இல்லை தப்பித்துவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுப்பியிருக்கிறது. ஆனால் அவர் தப்பிப்பதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம் அப்போதுதானே ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடக்க முடியும்.