சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு எந்த அளவிற்கு பார்வையாளர்கள் அதிகமோ, அந்த அளவிற்கு சீனில் அட்ராசிட்டியும் இருக்கும். ஒரு முழுநீள சினிமாவை எடுப்பதைப் போன்றே அந்த குழு எப்போது எண்ணிக்கொண்டிருக்கும். சண்டை, டூயட், ட்ரீம்ஸ் என எதையாவது செய்து, எபிசோடை கடத்துவது அவர்களின் பிரதான பணி. ரோஜா யார் குழந்தை? ரோஜாவின் அம்மா அப்பா யார்? ரோஜாவாக நடிக்கும் அனு யார்? என்று கடந்த 3 ஆண்டுகளாக நகர்ந்து கொண்டிருந்த ரோஜா, தற்போது, நீதிமன்ற காட்சிகளால் நிரம்பி வழிகிறது. 




கொலை வழக்கில் இருந்து ரோஜாவை காப்பாற்றிய காட்சிகளை, யாரோ சிறப்பாக இருந்ததாக கூறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நீதிமன்றத்தை விட்டு கேமராவை நகற்ற இப்போது ரோஜா படக்குழுவிற்கு விருப்பம் இல்லை போல. திடீரென ஒரு கதாபாத்திரம் உள்ளே எண்ட்ரி ஆகி, அது கணவரை கொன்றதாகவும், அவர்களுக்கு ரோஜா உதவி செய்ய, ரோஜாவிற்கு அர்ஜூன் உதவி செய்ய என, எக்ஸ்பிரஸ் ரயில், எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. 


இப்போது, அந்த ஏழை கர்ப்பிணியின் வழக்கை தான் அர்ஜூன் விசாரித்துக் கொண்டிருக்கிறார். கொலை நடந்த இடத்தில், வழக்கம் போல தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தும் வல்லமை பெற்ற(எல்லையை கடந்து அப்படி தான் காட்டுகிறார்கள்) சந்திரகாந்தாவுடன், நேரடியாக சென்று விசாரணை நடத்துகிறார் அர்ஜூன். அப்போது அங்கு ஒரு ரத்தக்கறையை அவர் கண்டுபிடிக்கிறார். அதன் சாம்பிள் எடுக்கிறார். கொலையானவரின் இரண்டாவது மனைவி மீது அவருக்கு சந்தேகம். அந்த பெண், சகோதரன் எனக்கூறும் நபர் மீதும் அவருக்கு சந்தேகம். நேராக அவர்கள் வீட்டிற்கு செல்கிறார். விசாரிக்கிறார். இரண்டாவது மனைவியுடன் இருக்கும் அந்த நபர், அர்ஜூனை வருகையை விரும்பவில்லை. அவரை வெளியேற கூறுகிறார்.






அர்ஜூனின் நோக்கம் ஒன்று தான்; எப்படியாவது அந்த நபரின் ரத்த சாம்பிளை எடுத்து, கைப்பற்றப்பட்ட சாம்பிளுடன் ஒப்பிட வேண்டும். ‛என்ன செய்யப் போகிறார் அர்ஜூன்... எப்படி எடுக்கப் போகிறார் ரத்தம்...’ என ஒரே பதட்டம் பார்வையாளர்களுக்கு(அப்படி தான் சொல்லனும்). தன்னை வெளியேற்ற சண்டையிடும் அந்த நபரின் கைகளத பிராண்டி, கீறிவிட்ட, அதிலிருந்த ரத்த சாம்பிளை எடுக்கிறார் அர்ஜூன்.




இதெல்லாம் கற்பனையின் உச்சம் தான். ஆனாலும், வேறு என்ன செய்வது... சகித்து கொண்டு தான் கடக்க வேண்டியுள்ளது. அது முடிந்த கையோடு சந்திரகாந்தாவுடன், கொலையான இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறார். இனி என்ன... கைநிறைய ஆதாரம்... மறுபடி கோர்ட் சீன் தான். சரி... இவங்களை காட்டிட்டு இருந்தா எப்படி... எங்கடா எங்க டெடர் அனு... என கேமராவை திருப்பினால், தனது தாய் செண்பகத்திற்கு எடுக்கப்படும் விழாவை சீர்குலைக்கவும், செண்பகத்தை பழிவாங்கவும், நகையில் ஏதோ ஒரு பாஃம் வைக்க திட்டமிடுகிறார். அதற்கு ஒரு ரிமோட் மாதிரியான செட்டப்பில் ஒரு சிப் வைக்கிறார். இதெல்லாம் பார்டரில் கூட பயன்படுத்துவார்களா என்று தெரியவில்லை. கற்பனையின் உச்சம் தான். ஆனாலும் ரோஜா ரசிகர்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பதால், ஏற்றுக்கொள்வார்கள். பாஃம் வெடிக்குமா...? நீதி வெல்லுமா? அர்ஜூன் அசத்துவாரா? என முடிந்திருக்கிறது நேற்றைய எபிசோட்! 


இதோ அந்த வீடியோவை காண...



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



 


ட்விட்டர் பக்கத்தில் தொடர





 





 


யூட்யூபில் வீடியோக்களை காண