1000 எபிசோடை கடந்தாலும், எண்ட் கார்டிற்கு எந்த அறிகுறியும் இல்லாமல், இன்னும் ஆயிரம் எபிசோடை நோக்கியே செல்கிறது ரோஜா சீரியல். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதனாலேயே ஜவ்வாக... இழுத்துக் கொண்டிருக்கிறது. சுவாரஸ்யம் என்கிற பெயரில், மொக்கை ட்விஸ்டுகளால் நிரம்பி தழும்பும் ரோஜா சீரியலின் புது வரவு, ஒரு கொலை வழக்கு. 


 



குழந்தையை அழைத்து வரும் ரோஜா


ரோஜாவுக்கும் அர்ஜூனுக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கு; அதுக்கே இன்னும் விடை தெரியவில்லை. இதற்கிடையில் ஒரு கர்ப்பிணி, தன் கணவரை கொலை செய்ததாக புகார். வழக்கம் போல, அவருக்கு உதவ செல்லும் ரோஜா, அந்த பெண்ணுக்காக தன் கணவரான வழக்கறிஞர் அர்ஜூன் உதவியை நாடுகிறார். சும்மாவே அர்ஜூன் ஆடுவாப்ள... ரோஜா சொன்னா விடுவாப்ளயா? ஆஜராகும் முன்பே, விடுதலை தீர்ப்போடு களமிறங்குகிறார். அவருக்கு எதிராக மறுபடியும் ஜேஎஸ் என்கிற ஜெயசீலன் ஆஜராக வருகிறார். அவர் தான் நம்ம டெரர் எம்.ஆர்.வாசு. 


ஏற்கனவே ரோஜா கைதான கொலை வழக்கில் அர்ஜூனிடம் தோற்றவர். அதற்கு பதிலடி தரப்போகிறேன் என்கிறார் ஜேஎஸ். ‛‛எல்லார் முன்னாடியும் சுட்ட வழக்கிலேயே சுஜூப்பியா ஜெயிச்சேன்... இந்த கேஸில் நேரடி சாட்சியே இல்லை... இதெல்லாம் எனக்கு ஒரு கேஸே இல்லை...’’ என டயலாக் பேசுகிறார் அர்ஜூன். ‛‛உன் பெண்டாட்டியை காப்பாத்திட்டேன்னு திமிரில பேசாத... இந்த கேஸில் நான் தான் ஜெயிப்பேன்...’’ வழக்கம் போல  ஜேஎஸ் கர்ஜிக்கிறார். அந்த கர்ப்பணி பெண்ணையின் பெண் குழந்தையை காப்பாகத்தில் விட மனதில்லாமல், வீட்டிற்கு அழைத்து வருகிறார் ரோஜா. 


 



குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்யப்படும் குழந்தை


வழக்கம் போல ரோஜா அழைத்து வரும் குழந்தையை அனு மற்றும் அவரது சித்தி யசோதா மற்றும் அவரது கணவர் பாலு ஆகியோர் வீட்டிற்கு அனுமதிக்க மறுக்கின்றனர். பதிலுக்கு நாலைந்து சென்டிமெண்ட் வசனங்களை போட்டு, ஒருவழியா அந்த குழந்தையை மாடிக்கு அழைத்துச் செல்கிறார் ரோஜா. அறைக்குச் சென்றதும், ‛பசிக்குது ஆண்ட்டி...’ என அந்த குழந்தை கூற, ‛அட ஆண்டவா...’ என மீண்டும் சென்டிமெண்ட் தீம். ‛கொஞ்சம் இரு...’ என ரோஜா ஓட, ஏதோ சாப்பாடு எடுக்கப் போறார் போல என பார்த்தால், ஒரு சாக்லெட்டோடு வந்து, அந்த குழந்தையிடம் தருகிறார். 


 



குழந்தையை பயமுறுத்த சாக்லெட் பூதம் கெட்டப்


உலகத்திலேயே பசியில் இருக்கும் குழந்தைக்கு சாக்லெட் கொடுப்பது நம்ம கோஷ்டி தான். இதை சாப்பிடு, நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் என கிளம்புவார் ரோஜா. இந்த சமயத்தில் குழந்தையை விரட்ட, அனு பிளான் போட்டு, வழக்கம் போல பெயிலியர் பிளான் பாலுவை உள்ளே அனுப்புகிறார். அந்த குழந்தையின் சாக்லெட்டை பிடுங்கும் பாலு, கட்டிலுக்கு அடியில் போர்வையால் உடலை மூடிக்கொண்டு குழந்தையை பயமுறுத்துக்கிறார். என்னடா என்று பார்த்தால்... அவர் தான் சாக்லெட் பூதமாம்; மிரட்டி குழந்தையை விரட்ட முயற்சித்தாராம். அதற்கு அந்த குழந்தையும் பயந்து அழ, அலறி அடித்து வருகிறார் ரோஜா. 






சாக்லெட் பூதத்திற்கு தண்டனை வழங்கும் ரோஜா


 


யார் குழந்தையை பயமுறுத்தியது என விசாரித்து, 2 நிமிடத்தில் கண்டுபிடித்து பாலுவுக்கு தண்டனை தருகிறார். எவ்வளவு ட்ரிக்ஸ் பார்த்தீங்களா....! சாதமும், பூதமும் தான் நேற்றைய ரோஜா சீரியலில் ஹைலெட். குழந்தை சாப்பிட்டதா, இல்லை சாப்பாட்டில் பூச்சியை போட்டு அதை தடுக்க அனு ஏதாவது ட்விஸ்ட் செய்வாரா என்கிற எதிர்பார்ப்புடன் நேற்று முடிந்தது எபிசேடு.


இதோ அந்த எபிசோடு வீடியோவாக...