சிங்ஸ் நூடுல்ஸ் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஐந்து நிமிட விடியோவில் மாஸ் காட்டியுள்ளார் ரன்வீர் சிங். திரைப்படத்திற்கான மெனக்கெடலுடன் எடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரப் படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த விளம்பரப் படத்தின் மேக்கிங்கை வெளியிட்டு மேலும் மாஸ் கூட்டியுள்ளார் ரன்வீர் சிங். 


ரன்வீர் சிங்


ரன்வீர் சிங் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னனி நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்துகொண்ட அவர் பிசியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். அவருக்கு கடைசியாக வெளியான 83 திரைப்படம் அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்துள்ளது. அந்த திரைப்படத்தில் கபில் தேவாகவே வாழ்ந்து இருந்தார்.






ஐபிஎல் 


சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அடிக்கடி தலையை காட்டினாலும், ஃபைனல் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற நிறைவு விழாவில் ஏ ஆர் ரஹ்மானுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த நிகழ்வில் நடனம் ஆடி மகிழ்வித்த அவர், தமிழ் ரசிகர்களுக்காக வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி குஷிப்படுத்தினார். 


விளம்பரங்கள்


பொதுவாகவே விளம்பரப்படங்களில் விரும்பி நடிக்கும் தன்மை கொண்டவர் ரன்வீர் சிங். கிரிக்கெட் போட்டிகளின் நடுவே கிட்டத்தட்ட பாதி விளம்பரங்களில் அவரே தோன்றுவார். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் சிங்ஸ் நூடுல்ஸ் நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து இருந்தது வைரலாகி இருந்தது.






June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


நூடுல்ஸ் விளம்பரம்


சிங்ஸ் எனப்படும் சைனீஸ் நூடுல்ஸ் நிறுவனத்திற்காகத்தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில், நிறைய ஆக்ஷன் சீக்வன்ஸ்களுடன் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் ஆனது பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டியால் எடுக்கப்பட்டது. இதனை பகிர்ந்த ரன்வீர் சிங் சத்தியமா இது வெறும் நூடுல்ஸ் விளம்பரம்தான் என்று கேப்ஷன் இட்டிருந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே சிம்பா, சூர்யவன்ஷி போன்ற படங்களுக்காக இணைந்து பணியாற்றி இருந்தமையால் இந்த விளம்பர படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தன. தற்போது ரோஹித் ஷெட்டி இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்ற தலைப்பில் சித்தார்த் மல்ஹோத்ராவை நாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.