KGF Yash Thank You Video: `எனக்கு நம்பிக்கை இருந்தது!’ - கேஜிஎஃப் 2 வெற்றிக்கு நன்றி தெரிவித்த யஷ்!

`ராக்கி’ கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் யஷ், தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்

Continues below advertisement

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள `கேஜிஎஃப்: சேப்டர் 2’ திரைப்படம் கடந்த ஒரு வாரத்தில் வெற்றிகரமாக திரையரங்கங்களில் ஓடிக் கொண்டிருப்பதோடு, உலகம் முழுவதும் சுமார் 700 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. `பாகுபலி - 2’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ள இந்தத் திரைப்படம், ஒரே வாரத்தில் 250 கோடி ரூபாய் ஈட்டி மற்றொரு புதிய சாதனையையும் பெற்றுள்ளது. 

Continues below advertisement

`ராக்கி பாய்’ கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் யஷ், தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மழை பெய்யாத ஊரில் பூஜை செய்யும் போது, நம்பிக்கையோடு குடை கொண்டு வந்த சிறுவனின் கதையைக் கூறியுள்ளார். அந்தக் கதையில் வரும் சிறுவனைப் போல, `கேஜிஎஃப்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, தானுன் அதே சிறுவனைப் போல, தன்னுடைய நம்பிக்கைக்காக `முட்டாள்’ எனவும், `அதீத நம்பிக்கை கொண்டிருப்பவன்’ எனவும் அழைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். 

`அந்த நம்பிக்கை கொண்ட சிறுவனைப் போல நான் தற்போது இருக்கிறேன்.. `நன்றி’ என்ற சொல் இதனைத் தீர்த்து விடாது. ஆனாலும், என் மனதின் ஆழத்தில் இருந்து என் மீது அன்பு பொழியும் அனைவருக்கும் நன்றி கூற விழைகிறேன். நீங்கள் அனைவரும் என் நெஞ்சில் குடியிருக்கிறீர்கள்’ என அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

`கேஜிஎஃப்: சேப்டர் 2’ திரைப்படத்தின் இந்தி மொழியாக்கம் இன்று 7வது நாளில் சுமார் 255 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola