Rocketry Twitter Review: நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள  ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


தென்னிந்திய சினிமாவில் சாக்லேட் பாய் அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் தற்போது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் நடிப்பதை காட்டிலும் மாதவனுக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். 


 ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை , திரைக்கதை , இயக்கம் என அனைத்தையும் மாதவனே கையாண்டுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், சூர்யா, ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முன்னதாக  நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் இந்த படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் எப்படி உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில..