தமிழ் மற்றும் இந்தி  திரைப்படங்களில் பிரபலமானவர் நடிகர் மாதவன் . தற்போது இவரது  நடிப்பு மற்றும் இயக்கத்தில் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையமாக எடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.


தென்னிந்திய சினிமாவா ? வட இந்திய சினிமாவா ?


. தென்னிந்திய மற்றும் வட இந்திய திரைப்படம் குறித்து மாதவன் பேசுகையில் , இந்த தலைப்பு ‘hue and cry’ என குறிப்பிட்டார். மொழி எதுவாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் கேஜிஎஃப் அத்தியாயம் 2 ஆகிய மூன்று படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஸனை குவித்தாலும் , சில படங்களுக்கு ஓரளவு சிறப்பான வரவேற்பும் கிடைக்க தவறவில்லை. அதே போல பாலிவுட்டில் கங்குபாய் கத்தியவாடி, பூல் புலையா 2 போன்ற படங்களுக்கும் வரவேற்பு இருந்தது. படம் சரியாக ஓடாததற்கு கொரோனாவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.ரசிகர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்தமான படங்களை ஏற்றுக்கொள்வார்கள். பிடிக்காத படங்களை நிராகரிப்பார்கள் என்றார் மாதவன் .



ஃபார்முலாவே பலவீனம்தான் :


மேலும் பேசிய மாதவன் திரைப்படங்களில் எது வேலை செய்கிறது, எது செய்யாது என்பதற்கு நிலையான வடிவமோ அல்லது ஃபார்முலாவோ இல்லை. சினிமாவிற்கு நிலையான ஃபார்முலாவே கிடையாது.ஒரு குறிப்பிட்ட சூத்திரத்திலேயே படம் எடுக்க நினைப்பவர்கள் பலவீனமானவர்கள். பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு லட்சியம் கொண்ட படங்களைத் தயாரிப்பதுதான் நல்ல யோசனை என்பேன். மேலும் எல்லாவற்றையும் செய்தியாக்க விரும்பும் நாடாக நாம் ஏன் மாறிவிட்டோம்? என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.






ரிலீஸ் தேதி :


மாதவன் தற்போது ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். படம் பான் இந்தியா திரைப்படமாக ட செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரடி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.