சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்த நடிகர்களின் வரிசையில் நடிகர் ரோபோ ஷங்கர் நிச்சயம் இடம்பெறுவார். காமெடியனாக சினிமாவுக்குள் நுழைந்தாலும் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தூள் கிளப்பியுள்ளார். மெல்ல மெல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் நடிகர் ரோபோ ஷங்கர். ஆனால் அவரின் இந்த வெற்றி படியை எட்டியதற்கு பின்னால் மிகவும் கரடுமுரடான வலி நிறைந்த பயணம் உள்ளது. 

Continues below advertisement

திரையில் இந்திரஜா :

பிரபலமான நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஷங்கரும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். 'பிகில்' படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்திலும் நடித்திருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி டான்ஸ் வீடியோ, போட்டோஸ் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார். 

Continues below advertisement

ரோபோ ஷங்கர் உடல்நிலை :

சில மாதங்களுக்கு முன்னர் ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் உடல் இளைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் இருந்தார். அவரை மீண்டும் பழைய நிலைக்கு கூட்டி வர அவரது மகளும் மனைவியும் பெரும் பாடுபட்டுள்ளனர். இன்று அவர் மெல்ல மெல்ல தேறி பழைய நிலையை அடைந்துள்ளார். 

இந்திரஜா திருமணம் :

ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கும் முறை மாப்பிள்ளை கார்த்திக்கும்  திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதை தொடர்ந்து ஷாப்பிங் வீடியோ, ஹல்தி பங்க்ஷன் என ஒரு பரபரப்பாக திருமண நிகழ்வுகள் களைகட்டியது. கடந்த மார்ச் 24ம் தேதி இந்திரஜா - கார்த்திக் திருமணம் அவர்களின் சொந்த ஊரான மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏராளமான திரை பிரபலங்கள் மற்றும்  சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

ராஜ விருந்து  :

இந்நிலையில் மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் தடபுடலாக மதுரையில் விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். ஊருக்கே கிடா விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர் விருந்தில் மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை, மட்டன் சுக்கா, மீன் ப்ரை, சிக்கன் 65, குடல், கோலா உருண்டை, சிக்கன் குழம்பு, ஈரல் வறுவல் என வகைவகையாக விருந்தளித்து அதகளம் செய்து இருந்தார் ரோபோ ஷங்கர். ஊரே ரோபோ ஷங்கர் வைத்த விருந்தை பார்த்து அசந்து போனது.