விஜய் சாருக்கு அட்வெஞ்சர் கதை சொன்ன அனுபவம் குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்து இருக்கிறார். 

Continues below advertisement


இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி  “ கடந்த நவம்பர் மாசம் விஜய் சாருக்கு கதை சொல்ற வாய்ப்பு கிடைச்சது. முதல்ல அதை எங்களால நம்ப முடியல. ஜனவரி 27 ஆம் தேதி அவரை சந்திக்க போனேன். என்னோட மூக்குத்தி அம்மன் அவருக்கு ரொம்ப பிடிச்சதுன்னு சொன்னார்.


விஜய் சார் படம் அப்படிங்கிறதால, எனக்கு ரொம்ப பிடிச்ச, பயங்கரமான ஃபேமிலி யெல்லாம் வைச்சு, அட்வெஞ்சர் கதையை சொன்னேன். முதல் பாதி மட்டும் சொல்லிட்டு, மீதி எப்படி போகும் அப்படிங்கிறத மட்டும் சொன்னேன். அவருக்கு அந்த ஐடியா ரொம்ப பிடிச்சிருந்தது. 




ஆனால் அந்தப்படத்தை எடுக்க, நான் ஒரு வருஷம் டைம் கேட்டேன். அவர் உடனே என்ன ஒரு வருஷமான்னு ஷாக் ஆகி, நான் மூக்குத்தி அம்மன் மாதிரி கொஞ்ச டைம்ல ஒரு சின்ன படம் பண்ணலாம்ன்னு நினைச்சேன்னு சொல்லிட்டு, வேற ஐடியா இருந்தா சொல்லுங்கன்னு சொன்னார். ஆனா நான் எங்கிட்ட வேற ஐடியா இல்லன்னு சொல்லிட்டு.. நான் இங்க நிறைய வருஷம் இருக்க ஆசைப்படுறேன். எனக்கு அவசரமே இல்ல.. இப்ப உங்ககூட படம் பண்ணலான்னு பராவாயில்ல.. தளபதி 77 பண்ணிக்கிறேன் சொன்னேன்.” என்று பேசினார். 


முன்னதாக, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் அண்மையில் வெளியான  ‘வீட்ல விசேஷம்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


 


 






இதில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.