சென்னை, ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கஞ்சி விக்கி என்பவரை ஒரு கும்பல் 2021ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்தது. இதில் முக்கியமான நபர் தலைமறைவான நிலையில் விக்கியைக் கொன்ற நபரை பழிக்கு பழிவாங்க அவரது தரப்பினர் காத்திருந்தனர்.


பழிவாங்க திட்டம்


இந்நிலையில், விக்கியைக் கொலை செய்த நபர் திருவல்லிக்கேணி வருவதாக கொலை கும்பலுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, திருவல்லிக் கேணி பகுதியில் நேற்று (ஜூன். 25) இரவு 14 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.


இதுகுறித்த ரகசியத் தகவல் திருவல்லிக்கேணி காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது. இதனால், அந்த லாட்ஜை திடீரென முற்றுகையிட்ட காவல் துறையினர், அந்த அறையில் தங்கியிருந்த 14 பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அந்த அறையில் இருந்து இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாறை ஆகியவற்றை  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.


10 பள்ளி மாணவர்கள்


தொடர்ந்து அவர்களை காவல் துறைனர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், விக்கியைக் கொன்ற கொலையாளி திருவல்லிக்கேணி வருவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து அவரைக் கொலை செய்யவே 14 பேரும் அங்கு வந்து தங்கியிருந்தது தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து பழைய வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்த சரத்கு மார் (25), அதே பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (21) சாய்காந்த் (19) ஆகியோருடன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உள்பட 18 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கைது செய்யப்பட்டுள்ள 14 நபர்களில் 10 பேர் பள்ளி படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது


Fastag Viral Video : டிஜிட்டல் வாட்ச் மூலம் ஸ்கேன்! கார் கண்ணாடியை துடைப்பது போல பாஸ்டேக் கொள்ளையா? உண்மை என்ன?


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்