என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கி ஊர்வசி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் வீட்ல விசேஷம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.படத்தை இயக்கி நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படத்தில் நடந்தது போல தனது நிஜ வாழ்க்கையிலும் நடந்ததாகக் கூறியுள்ளார். 






ரேடியோ ஆர்.ஜே வாகத் தனது பயணத்தைத் தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜிக்கு உடன்பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் மூன்று தங்கைகள். மூக்குத்தி அம்மன் படத்தில் வருவது போல தனது தந்தை குடும்பப் பொறுப்புகளை உதறித் தள்ளிவிட்டு இருந்ததால் அதன் காரணமாக சென்னையின் பல இடங்களில் வாடகை வீடுகளில் மாறி மாறித் தாங்கள் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுதவிர மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் வீட்டில் அம்மா கருவுற்றதாகவும் தான் கல்லூரி முதலாம் ஆண்டு சேர வரும்போது அம்மா தன் கடைசி தங்கையைக் கருவுற்றிருந்ததால் வயிற்றில் அவளைச் சுமந்துகொண்டே வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


ஆர்.ஜே பாலாஜி இதனால் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் வரை தானும் மனைவியும் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்திலேயே இல்லை என்றூம் பிறகு தன்னுடைய தாத்தா இறந்த சூழலில் திடீரென மனைவி கருவுற்றதாகவும் தாத்தாதான் பிள்ளையாகப் வந்துள்ளார் என்கிற எண்ணத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டதாகவும் பாலாஜி தனது பெர்சனல் பக்கத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் திரைப்படம் தங்களுக்குத் தேவையான அளவு வசூலை ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆர்.ஜே. பாலாஜி இந்தி படத்தை ரீமேக் செய்து கெடுத்துவிட்டதாக அண்மையில் ஒரு சினிமா ரிவியூவரின் கருத்துக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.