அண்மையில் சத்யராஜ், ஊர்வசி நடிப்பில் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ட்ரெய்லர் அனைவரின் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இந்தியில் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக். இந்தியில் ஹிட்டான ’பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் ’வீட்ல விசேஷம்’ திரையரங்குகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி, இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானாவின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர, இணைந்து எழுதி, இணை இயக்கமும் செய்துள்ளார். தமிழ் ரீமேக் இந்தி ஒரிஜினலில் இருந்து மாறுபட்டிருப்பது குறித்து மனம் திறந்த பாலாஜி, 'நம் மாநிலத்தின் உணர்வுகள் வடக்கில் இருப்பதை விட வித்தியாசமானது', என்று குறிப்பிட்டுள்ளார்.






இதைப்பற்றி விரிவாகப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "பதாய் ஹோ ஒரு நல்ல படம், ஆனால் படத்தை முழுவதுமாக மொழிமாற்றம் செய்ய முடியாது, படத்தை ரீமேக் செய்ய வேண்டும். நம் மாநிலத்தின் உணர்வுகள் வேறு.  வடக்கில் உள்ள உணர்வுகள் வேறு.இரண்டாவது விஷயம், படத்தில் சில விஷயங்கள் உள்ளன, தனிப்பட்ட முறையில், ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக (இணை எழுத்தாளர் மற்றும் இணை இயக்குனராக) எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. எடுத்துக்காட்டாக ’பதாய் ஹோ’வில் உள்ள தாய் கதாபாத்திரம் கருக்கலைப்பு தவறு என்று கூறுகிறது. ஆனால் நான் தனிப்பட்ட முறையில் கருக்கலைப்புக்குச் சார்பானவன். கருக்கலைப்பு ஒரு பாவம் என்று நான் நம்பவில்லை என்பதால் நான் அதை ரீமேக்கில் மாற்ற வேண்டியிருந்தது. அதேபோல், படத்தில் இருந்து சில விஷயங்களை, நாங்கள் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. தமிழ் பதிப்பு இந்தியை விடவும்  நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார்.