ராஷ்மிகாவுடன் மீண்டும் பணிபுரிய விரும்பவில்லை என பிரபல கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பல இந்திய திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பாராட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில் வசூலில் ரூ.400 கோடியை கடந்து சாதனைப் படைத்தது.
இதனையடுத்து கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காந்தாரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தபடம் வெளியானது. இதற்கிடையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி இருந்தார்.
இருவரும் நண்பர்கள் என்பதால், இப்படத்தை ரக்ஷித்தே இந்தப்படத்தை தயாரித்து இருந்தார். ஆனால் ரக்ஷித் ரெட்டியுடன், ராஷ்மிகாவிற்கு காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில்; ராஷ்மிகா திருமண செய்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கினார். இதனால் அவர்களுக்குள் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராஷ்மிகா அந்த நேர்காணலில் ரக்ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை கூறாமல் இருந்தார். இதனால் கன்னட திரையுலகம் ராஷ்மிகா மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் கன்னடத்தில் நடிப்பதற்கும், தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டியிடம், சமந்தா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரில் யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு எனது படத்தின் கதையை எழுதி முடித்ததும், அதற்கான நடிகர்களை நானே முடிவு செய்கிறேன். புதுமுகங்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதால், அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அதனால் நீங்கள் சொன்ன இந்த பிரபலங்களுடம் நான் பணியாற்ற விரும்பவில்லை என ரிஷப் பதில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சாய் பல்லவி மற்றும் சமந்தாவின் வேலையைப் பாராட்டி அவர்களின் பணி எனக்கு பிடிக்கும் என ரிஷப் கூறியதன் மூலம் ராஷ்மிகா சொன்னதற்கு ரிஷப் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.