ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று உலகம் முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. காந்தாரா முதல் பாகத்தைக் காட்டிலும் பெரிய பொருட்செலவில் உருவாகியிருந்தாலும் பிற மொழி படங்களில் வெளியான பீரியட் திரைப்படங்களை விட இப்படத்தின் பட்ஜெட் மிக குறைவே. காந்தாரா படத்தின் பட்ஜெட் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. 

Continues below advertisement

தரமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள்

காந்தாரா சாப்டர் 1 படத்தின் முழு கதையும் மன்னராட்சி காலத்தில் நடைபெறுகிறது. ஐரோப்பியர்களுடனான வனிகம். அரசர்களுக்கும் பழங்குடியினருக்கு இடையிலான மோதல்கள் , நாட்டார் தெய்வங்கள் என மிக பிரம்மாண்டமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன. படத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மற்ற மொழியில் சரித்திர படங்களை பல நூறு கோடிகள் செலவிட்டு எடுத்து வரும் நிலையில் மிக சிக்கனமாக பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. தமிழில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 350 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் காந்தாரா 2 ஆம் பாகத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 125 கோடி மட்டுமே. இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே அளித்துள்ளது. நடிகர்களுக்கு கோடிகளில் செலவு செய்யாமல் கதைக்கு தேவையான இடங்களில் செலவு செய்தால் குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு பெரிய கதையை எடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது காந்தாரா .

Continues below advertisement

காந்தாரா படக்குழு 

ரிஷப் ஷெட்டி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ருக்மினி வசந்த் , ஜெயராம் , கிஷோர் , கிஷோர் , ராகேஷ் புஜாரி , குல்ஷன் தேவையா , பிரமோத் ஷெட்டி , பிரகாஷ் துமினாட் , தீபக் ராஜ் , ஹரிபிரசாத் , நவீன் டி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாம்பேல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது 

காந்தாரா முதல் நாள் வசூல் 

காந்தாரா முதல் பாகம் ரூ 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் ரூ 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. முதல் பாகத்தின் பான் இந்திய வெற்றியால் தற்போது வெளியாகியிருக்கும் காந்தாரா 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது . உலகம் முழுவதும் 8 மொழிகளில் வெளியான காந்தாரா திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே 4.75 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகி ரூ 13.07 கோடி வசூல் செய்தது. முதல் நாளில் காந்தாரா திரைப்படம் இந்தியளவில் ரூ 60 கோடி வரை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. காந்தாரா திரைப்படம் . படத்திற்கு அனைத்து தரப்பிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் படம் 1000 கோடி வசூலை மிக எளிதாக தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.