ரிஷப் ஷெட்டியுள்ள காந்தாரா 2 ஆம் பாகம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கண்டிருந்தாலும் இடதுசாரி தரப்பினரிடம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பழங்குடி இன மக்களின் நாட்டார் தெய்வங்களை மையமாவ வைத்து உருவாகியுள்ள இப்படம் வரலாற்றை இந்துத்துவ பார்வையில் அனுகுவதாக பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள்
வரலாற்றை இந்துத்துவ பார்வையில் சித்தரிக்கிறதா காந்தாரா
காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் 1 கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ருக்மினி வசந்த் , குல்ஷன் தேவையா , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். வசூல் ரீதியாக இப்படம் இதுவரை உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. படத்தின் காட்சியமைப்புகள் குறித்து பலர் வியந்து பேசி வந்தாலும் இடதுசாரி அமைப்புகள் இப்படத்தில் பழங்குடிகளின் கடவுள்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
"பார்வையாளர்களின் வாயை பிளக்கச் செய்துவிட்டால் போதும் அவர்களின் சுயசிந்தனை இரண்டாம் பட்சமாகிவிடும் என்பதற்கு காந்தாரா மற்றுமொரு உதாரணம்.பழங்குடியின மக்களின் வாழ்வியலை பேசுகிறது இந்தத் திரைப்படம். அவர்களின் வழிபாட்டு முறையின் மூல அம்சங்களை விவரிக்கையில், அவ்வழிபாடு துவங்கிய இடம் குறித்தப் பார்வை முக்கியமானது. அதை வின்னிலிருந்து விழும் எரிக்கல்லின் நீட்சியாகப் புனையும் பொழுதே கதாசிரியர் மக்களின் பக்கம் நிற்பதில்லை என்று புலனாகிவிடுகிறது.
எந்த மனிதர்களின் வழிபாட்டு அம்சத்தை இந்தத் திரைப்படம் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொள்கிறதோ, அம்மக்களின் கலாச்சார வேரின் துவக்கப் புள்ளியாக உருவ வழிபாட்டை நிறுவும் அபாயத்தை ரிஷப் ஷெட்டி செய்கிறார்.
இறுதிவரையில் இம்மக்களின் கடவுள் யார்? வின்னிலிருந்து விழுந்த கல்லா? நதியில் கிடைத்த கல்லா? ஈஸ்வரனா? ஈஸ்வர லிங்கத்துக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த பட்டைப் போட்டக் குரங்கா? புலியா? பஞ்சுருளியா? படம் இதற்கு பதில் வழங்குவதில்லை
இரண்டு கலாச்சாரங்களின் இணக்கத்தை திரைப்படம் பேசுகிறது. ஆனால் அந்த இணக்கம் கலாச்சார கலப்பிற்கு எதிரான இணக்கம். ரிஷப் ஷெட்டி பழங்குடியின கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கும் அதே சமயம், அவற்றின் சமூகவியல் பிரிவினைகளை ஏற்கும் மனநிலைக்கும் செல்கிறார். இருப்பதிலேயே பெரிய அபாயம் இதுதான். நாம ஒன்னா வாழுவோம், ஆனா நம்ம இரண்டு பேரும் ஒன்னு இல்ல. இதை அரச வம்சத்துடன் செய்தால் கூட பரவாயில்லை, மற்றொரு so-called தீய சக்தி பழங்குடியிடம் செய்கிறது இத்திரைப்படம். " என இப்படம் குறித்தான விமர்சனம் ஒன்றில் இப்படி கூறப்பட்டுள்ளது