இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான ஷுப்மன் கில் சில மாதங்களுக்கு முன்னர் மாஸ்டர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோருடன் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைத்தளங்கள் எங்கும் செய்திகள் பரவி வந்தன. தற்போது அந்த வதந்திகளை பொய்யாக்கும் விதமாக கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் குறித்த வேறு ஒரு வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 



சின்னத்திரை நடிகை ரிதிமா பண்டிட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் கடந்த சில நாட்களாக டேட்டிங் செய்து வருவதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாகவும் வதந்தி பரவி வருகிறது. 


 



இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் நடக்கலாம் என்றும் அவர்கள் இருவரும் தங்களின் திருமணத்தை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர்கள் தங்களின் திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் அவர்கள் திருமணத்தில் மீடியா கவரேஜ் எதுவும் அனுமதிக்கப்படாது என பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



"பஹு ஹுமாரி ரஜினி காந்த்", "குண்டலி பாக்யா" உள்ளிட்ட  தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட ரிதிமா பண்டிட் "பிக் பாஸ் OTT 1"ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரபலமானார். தற்போது ஷுப்மன் கில் உடனான திருமணம் குறித்த வதந்தியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சோசியல் மீடியாவில்  மிகவும் வைரலாக பகிரப்பட்டு வரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரிகை ஒன்றுக்கு வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். 



 


"அனைவருக்கும் காலை வணக்கம், பத்திரிகையாளர்களின் சரமாரியான போன் கால் தான் என்னை எழுப்பியது. எனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தான் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அது யாருடன்? அது நடக்க போவதில்லை. உங்களுடைய நாளை இனிமையாக துவங்குங்கள். அப்படி ஏதாவது நடப்பதாக இருந்தால் நான் உங்களுக்கு தெரிவிப்பேன்" என வீடியோ மூலம் விளக்கம் கொடுத்து இருந்தார். 


ரிதிமா பண்டிட் இந்த விளக்கம் நிச்சயம் ஊடங்கள் அனைவருக்கும் இருக்கும் கேள்விகள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷுப்மன் கில் தரப்பில் இருந்து இந்த வதந்தி குறித்து எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.