பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பிறகு சர்ச்சையில் சிக்கிய காதலியான ரியா சக்ரபர்த்தி குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 


பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :


நடிகர் சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், மோசடி, கிரிமினல் மற்றும் அளவுக்கு அதிகமான போதை பொருள் கொடுத்ததாகவும், தவறான வழிநடத்துதலுக்காக மற்றும் பல்வேறு குற்றங்களின் கீழ் ரியா சக்ரபர்த்தி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்படி சர்ச்சையில் சிக்கி இருந்த ரியா சக்ரபர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரும் புள்ளி ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 



 


மீண்டும் டேட்டிங் செய்யும் ரியா:


ரியா சக்ரபர்த்தி தற்போது பண்டி சஜ்தேவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேஷன் டிசைனர் சீமா சஜ்தேவின் சகோதரர் தான் பண்டி சஜ்தேவ். சமீபத்தில் இவர் ஒரு ரியாலிட்டி ஷோவான 'ஃபெபுலஸ் லைவ் ஆஃப் பாலிவுட் வைஃப்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பண்டி சஜ்தேவ், கார்னர் ஸ்டோன் ஸ்போர்ட்டின் MD & CEO ஆவார். இவர் ஏற்கனவே சோனாக்ஷி சின்ஹாவுடன் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 







ஆதரவாக இருந்த பண்டி :


அந்த வகையில் தற்போது பண்டி சஜ்தேவ் மற்றும் ரியா சக்ரபர்த்தி பொது இடங்களில் ஒன்றாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து இருவரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும்  இருவரும் தங்களது தனிப்பட்ட விஷயங்களை பொது விஷயமாக்க விரும்பவில்லை. கடந்த சில வருடங்களாக மிகுந்த துயரத்தில் ரியா சக்ரபர்த்தி  இருந்தபோதெல்லாம் பண்டி அவருக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 






சுஷாந்த் வழக்கில் ஆஜரான பண்டி :


ரியா சக்ரபர்த்தி கடந்த காலங்களில் பண்டி சஜ்தேவின் கஸ்டமராக இருந்துள்ளார். அதனால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விசாரணையின் போதும் அங்கு பண்டி ஆஜராகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியா ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகு ஒரு சில பொது இடங்களில் மட்டுமே காணப்பட்டாலும் அமிதாப் பச்சன் மற்றும் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து 'செஹ்ரே' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.