ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே , ஜெயராம் , கருணாகரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் ரெட்ரோ ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

ரெட்ரோ முன்பதிவுகள்

ரெட்ரோ படத்தின் முன்பதிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டில் மொத்தம் 1030 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. உலகளவில் 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகிறது.  இதுவரை ஒன்றரை லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ள நிலையில் முன்பதிவுகளில் மட்டும் 2.70 கோடி ரூபாய் படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக

பூஜா ஹெக்டேக்கு இப்படி ஒரு பழக்கமா

ரெட்ரோ படத்தில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இதில் கனிமா பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் பலரை கவர்ந்துள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் அரேபிக் குத்து பாடல் மூலம் கலக்கிய பூஜா ஹெக்டே தற்போது கனிமா பாடலிலும் செம லோக்கலாக இறங்கி அடித்துள்ளார். ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷனின் போது பூஜா ஹெக்டே தான் ஒரு கேமிங் பிரியை என்பதை பகிர்ந்துள்ளார்

நான் இப்போது RED DEAD REDEMPTION விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதன் கதை அற்புதமாக இருக்கும். எமோஷனலான கதை, ஒரு சினிமா போன்று தரமான கிராஃபிக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது மேலும் FORZA HORIZON, NINTENDOSWITCH, ZELDA, MARIOKART, OVERCOOKED ஆகியவையும் விளையாடுகிறேன். விரைவில் RED DEAD REDEMPTION முடித்துவிடுவேன். அதன் பிறகு GOD OF WAR, UNCHARTED துவங்கலாம் என்றிருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்