திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ரேஷ்மா பசுபுலேட்டி நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர். இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். அண்மையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டி பிரபலமானது.
அதில் அவரிடம் ரேபிட் ஃபையர் முறையில் பல கேள்விகள் கேட்கப்பட, அதற்கு ரேஷ்மாவும் பளிச், பளிச் என பதில்களைப் பதிவு செய்தார்.
அந்தப் பேட்டியில் இருந்து...
உங்களுடைய பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் டேட் எது?
ஒரே டேட்டில் எப்படி பெஸ்ட், வொர்ஸ்ட் அமையாது. நான் டேட்டிங்கே போனதில்லை.
உங்களுக்குப் பிடித்த மொழியில் ரசிகர்களுக்கு ஒரு டயலாக்..
நான் பல மொழி படங்களில் நடித்திருக்கிறேன். மீ அந்தண்டினா சால் இஷ்டம். இது என் ரசிகர்களுக்கு.
உங்களுக்கு எதைப் பார்த்தால் ரொம்ப பயம்?
இந்த நேர்காணல். வந்தவுடன் பிராங்க் பண்ணீங்க. இப்போ கேள்வி கேட்டு தலை வலி வர வச்சிருக்கீங்க. அதனால் அடுத்து என்ன செய்வீங்களோன்னு பயமாக இருக்கிறது.
உங்களுக்கு உங்கள் உடலில் எந்த பாகம் ரொம்ப பிடிக்கும்?
எனது பாதம். ஏன் தெரியுமா? யாராவது என்னிடம் தவறாகப் பேசினால் அதிலிருக்கும் செருப்பை எடுத்து சாத்தலாம்.
உங்களுடைய செலிப்ரிடி க்ரஷ் யார்?
நிறைய பேர் இருக்காங்க. விஜய் சார், அஜித் சார், எஸ்டிஆர், சூர்யா சார், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு மீது எனக்கு ஈர்ப்பு வேண்டும்.
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பழக்கம்..
என் சிரிப்பு. நான் ரொம்ப சத்தமாக சிரிப்பேன். ஆனால் சிலருக்கு அது பிடிக்காது. அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
உங்களின் யூஸ்லெஸ் டேலன்ட் எது என நினைக்கிறீர்கள்?
எனது பேச்சுத் திறன். ஆனால் வாயை வைத்து தான் பிழைக்கிறேன்.
உங்களின் முதல் வேலை எது? அதன் சம்பளம் என்ன?
சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸாக இருந்தேன். ஒரு மணி நேரத்துக்கு 10 யுஎஸ் டாலர் சம்பாதித்தேன்.
உங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் வரும் கருத்து பற்றி?
சமூக வலைதளங்களில் ஓவர் ஃப்ரீடம் இருக்கு. அங்கு சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. நாம நமக்கு என்ன பிடிக்குதோ, எது சரியோ அதை செய்யலாம். அப்புறம் சோசியல் மீடியாவுல இருக்க போஸ்ட பார்த்து நமக்கு இப்படி லைஃப் இல்லையே என்று யாரும் ஏங்காதீங்க. ஏன்னா அது எல்லாம் சுகர் கோட்டட், பொய். அவரவர் நிஜத்தில் என்ன அனுபவிக்கிறார்கள் என்பது தெரியாது.
இவ்வாறு ரேஷ்மா தெரிவித்துள்ளார்.